பிசாச யோக ராசிபலன்: சனி தேவன் மார்ச் மாதம் 29ம் தேதி, குரு பகவானின் ராசியான மீனத்தில் பெயர்ச்சியாகிறார். தற்போது ராகு மீனத்தில் சஞ்சரித்து வரும் நிலையில், சனியின் சஞ்சாரம் காரணமாக ராகுவுடன் சேர்க்கையை உருவாக்கும். இதனால் பிசாச யோகம் உருவாகிறது.
சனி மற்றும் ராகு கிரகங்களின் சேர்க்கை சிலருக்கு அசுப பலன்களைக் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் மீன ராசியில் உருவாகும் பிசாச யோகம் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் என்றும், முக்கியமாக பண விரயம், நிதி இழப்பு ஆகியவை எற்படும் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
சனி பெயர்ச்சி 2025: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனைக் கொடுக்கும் சனி பகவான், மீனத்திற்கு செல்கிறார். தற்போது மீனத்தில் இருக்கும் ராகு மே 14ம் தேதி கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகும் நிலையில், மார்ச் 29ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை சனி மற்றும் ராகு மீனத்தில் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளனர்.
பிசாச யோக பலன்கள்: சோம்பேறித்தனத்தை தரக்கூடிய சனி பகவான், மனக் குழப்பத்தைத் தரக்கூடிய ராகுவுடன் சேர உள்ளாதால் உருவாகும் பிசாச யோகம் என்னும் அசுப யோகத்தால் 5 ராசிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கடக ராசிக்காரர்களுக்கு சற்று கடினமான காலமாக இருக்கும். பண இழப்பு பொருளாதார நிலையை பாதிக்கும். பணி நிமித்தமாக அதிக அளவில் பயணம் செய்ய நேரிடலாம். இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். குறிப்பாக தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீட்டையும் தவிர்க்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.
கன்னி ராசிக்காரர்கள் எந்த ஒரு முடிவையும் யோசிக்காமல் எடுப்பதை தவிர்க்கவும். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கலாம். இதனால் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். நிதி நிலைமை சீராக இருக்க, வீண் செலவுகளைத் தவிர்த்து, சிந்ததித்து முடிவு எடுங்கள். இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். கடினமாக உழைத்தாலும் வெற்றியை அடைவது கடினமாக இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கடன் தொல்லை அதிகரிக்கலாம். பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்க்கவும். காதல் உறவுகளில் கவனமாக இருங்கள். இல்லையெனில் உறவு முறிந்துவிடும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சவாலானதாக இருக்கும். சனியில் தாக்கம் காரணமாக குழப்பமான சூழ்நிலை உருவாகலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இது குடும்ப அமைதியைப் பாதிக்கும். உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்கள் பேச்சை கட்டுப்படுத்துங்கள். இல்லையெனில் நெருங்கிய நபர்கள் உங்களிடமிருந்து விலகிச் செல்லலாம்.
மீன ராசிக்காரர்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், குறிப்பாக கால் மற்றும் முழங்கால் வலி பாதிப்பு இருக்கலாம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்குவதைத் தவிர்க்கவும். இந்த நேரத்தில் உங்களின் முக்கியமான வேலைகள் தடைபடலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.