சுய இன்பம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள்

ஆண்கள் அடிக்கடி சுய இன்பம் செய்யலாமா? அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

 

சுய இன்பம் குறித்து பல தகவல்கள் பொதுவெளியில் உலாவிக் கொண்டிருக்கின்றன. அவை ஆண்களின் உடல் நலத்துக்கு நல்லதா? கெட்டதா? என்பதையும், சுய இன்பத்தால் ஏற்படக்கூடிய பின்விளைவுகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். 

1 /8

சுய இன்பம் செய்வது தவறு என ஆண்களிடம் பொதுவான எண்ணம் இருக்கிறது. சுய இன்பத்தில் ஈடுபடுவது தவறல்ல. சுய இன்பம் செய்வதை ஒரு குற்ற உணர்ச்சிபோன்று கருதவேண்டிய அவசியமில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

2 /8

எவ்வளவு ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள் என 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், 57 விழுக்காடு ஆண்கள் மட்டுமே சுய இனபம் செய்கிறார்கள் என தெரியவந்தது. அவர்களில் பெரும்பாலானோர் ஓய்வில் இருக்கும் நேரத்தில் சுய இன்பம் செய்கிறார்களாம்.  

3 /8

பெண்களும் சுய இன்பம் செய்வார்களாம். அவர்களுக்கும் இதுஒரு வைபரேட்டர் போன்று தான். சுய இன்பம் செய்தால் செக்ஸ் ஆர்வம் குறையும் என சொல்வது தவறு. சுய இன்பத்தால் உடலுறவு குறித்த ஆர்வம் மேலோங்கவே செய்யும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

4 /8

அடிக்கடி சுய இன்பம் செய்தால் ஆண்களின் உடல் நிலை பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு தன்மை குறையும் என்பதும் கட்டுக்கதை என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆரோக்கியமானது தான்.  

5 /8

அதேநேரத்தில் ஆண்குறி காயமடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்மையை எப்படி மென்மையாக கையாள்கிறீர்களோ அதனைப் போல் உங்கள் ஆண்குறியையும் உபசரிக்க வேண்டும். கடினமாக இழுக்கவோ அல்லது அழுத்தவோ கூடாது.

6 /8

உடலுறவு, சுய இன்பம் இரண்டும் வேறுபட்டது. உடலுறவைக் காட்டிலும் உட்சபட்ச திருப்தியை சுய இன்பத்தில் கிடைக்கும் என்பது உண்மை தான். ஆனால், உடலுறவு மூலம் கிடைக்கும் தீண்டல், சீண்டல் சுகம் சுய இன்பத்தில் கிடைக்காது.

7 /8

சுய இன்பம் 15 வயது சிறுவனில் இருந்து  65 வயது முதியவர் வரை சுய இன்பத்தில் ஈடுபடலாம். பெண்களும் இதேபோன்றுதான். சுய இன்பத்தால் மனநிறைவு, மகிழ்ச்சி கிடைக்கும். தேவையற்ற சிக்கல்கள் வரும்போது அது உங்களை ஆசுவாசப்படுத்தும். 

8 /8

சர்வதேச அளவில் சுய இனபத்துக்கு ஒரு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. மே மாதம் அதிகாரப்பூர்வமாக தேசிய சுயஇன்பம் மாதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி உங்களுக்கு கூடுதல் சந்தேகம் இருந்தால் பாலியல் மருத்துவரை அணுகி விளக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.