ஜோதிடம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஒருவரது ராசியின் அடிப்படையில், அந்த நபரின் இயல்பு மற்றும் ஆளுமை ஆகியவற்றைக் கண்டறிய முடியும். 12 ராசிகளுக்கும் பிரத்யேகமான சில குணங்கள் இருக்கும். அன்பு, சாதுர்யம், பிறருக்கு உதவுக் தன்மை, இரக்கம், ஈகை என ஒவ்வொரு ராசிக்கு ஒவ்வொரு தனித்துவம் உண்டு.
அந்த வகையில் ஜோதிட சாஸ்திரப்படி, மூன்று ராசிக்காரர்கள் தங்கள் இலக்குகளில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள். மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் இவர்கள் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் இந்த குணத்தால் இவர்கள் எளிதில் முன்னேற்றம் அடைகிறார்கள். இந்த மூன்று ராசிகள் எவை என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மிதுன ராசிக்காரர்கள் பேசுவதில் வல்லவர்கள். இந்த நபர்கள் தங்களைப் பற்றி நல்ல விஷயங்களை மட்டுமே கேட்க விரும்புகிறார்கள். வாதங்களில், அவர்கள் எதிரில் உள்ளவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள். அவர்கள் சொல்வதை யாரேனும் கேட்கவில்லை என்றால், இவர்களுடனான நட்பை முறித்துக் கொள்வதில் சிறிதும் தாமதிக்க மாட்டார்கள். இந்த நபர்களுக்கு, சுய மரியாதை மிக முக்கியமான விஷயம் ஆகும். இவர்கள் தங்கள் இலக்கில் சமரசம் செய்ய மாட்டார்கள். ஒரு இலக்கை நிர்ணயித்து விட்டால், அதை அடைய அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். இந்த குணங்களால் இவர்கள் எளிதில் வெற்றியும் பெற்று விடுகிறார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தலைப்புச் செய்திகளில் இருக்க விரும்புகிறார்கள். இவர்கள் தங்கள் லட்சியத்தை அடையவும், வாழ்வில் முன்னேறவும் கடினமாக உழைக்கிறார்கள். அவர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்கள். இவர்களின் ராசிக்கு அதிபதி சூரியன். சூரியன் அனைத்து கிரகங்களுக்கும் ராஜாவாக இருக்கிறார். இவர்களும் அப்படியே இருக்க விரும்புகிறார்கள்.
கன்னி ராசிக்காரர்கள் பண பரிவர்த்தனைகளில் மிகவும் தீவிரமானவர்கள். இவர்கள் அனைத்து விஷயங்களிலும் சரியான கணக்கு வழக்கை வைத்திருக்க விரும்புகிறார்கள். இவர்கள் பண விஷயத்தில் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். இவர்கள் நண்பர்களுக்கும் மிகவும் யோசித்தே உதவி செய்கிறார்கள். யாரேனும் இவர்களது மனதை புண்படுத்தினால் அவர்களை எளிதில் மன்னிக்க மாட்டார்கள்.