கோடை வெயிலுக்கு கரும்புச் சாறு ஏன் அவ்வளவு நல்லது...? கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க!

Health Benefits Of Sugarcane Juice: கரும்புச் சாறு கோடை காலத்தில் பலராலும் விரும்பிக்கூடிய பானமாகும். விலை மிலவென்றாலும் ஆரோக்கியத்தில் சிறந்தது. அந்த வகையில், இந்த கோடையில் கரும்புச் சாற்றை குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை இதில் தெரிந்துகொள்ளலாம்.

கரும்புச் சாறு என்பது வீட்டில் அவ்வளவு எளிதில் போட்டுவிட முடியாது. எனவே, உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிறு வியாபாரியிடமே அருந்துவதும் நல்லதுதான். 


 

 

 

 

 

1 /7

எனர்ஜி: சுக்ரோஸ் இதில் அதிகம் இருப்பதால் உடலை நீரேற்றமாகவும், ஆற்றலுடன் இயங்கவும் உதவும். இதில் கார்போஹைரேட்ஸ், புரதம், மினரல்கள் உள்ளன.   

2 /7

வயதே ஆகாது: இதில் பீனோலிக் அமிலம், ஃபிளாவனாய்டுகள், ஆண்டிஆக்ஸிடன்டுகள் அதிகம் இருப்பதால் வயதான தோற்றமே உங்களுக்கு வராது. சருமம் சுருக்கங்கள் இன்றி தெளிவாக இருக்கும். 

3 /7

கர்ப்பணிகளுக்கு நல்லது: ஃபோலிக் அமிலம், வைட்டமிண் பி, ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ், கால்சியம் ஆகியவை இதில் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது. 

4 /7

மருந்து: ஆயுர்வேத மருத்துவப்பபடி, கரும்புச் சாறு என்பது மஞ்சக்காமாலை நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்தாகும். 

5 /7

செரிமானப் பிரச்னைகளை சரியாக்கும்: இதில் போட்டஸியம், நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானம் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். 

6 /7

டிப்ஸ்: இதனை இளநீர், லெமனுடன் கலந்து குடித்தால் உடலில் இருக்கும் நச்சுக்கள், தொற்றுகளை வெளியேற்ற உதவும். குறிப்பாக, சிறுநீரக கல் மற்றும் சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு கைக்கொடுக்கும்.    

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டவை. கர்ப்பிணிகள், மஞ்சக் காமாலை நோயாளிகள் என அனைவரும் இதை பின்பற்றும் முன் உங்களின் மருத்துவரிடம் சரியான ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தகவல்களுக்கு Zee News பொறுப்பேற்காது.