தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான், மே மாதம் ஒன்றாம் தேதி ரிஷப பெயர்ச்சியாக உள்ளார். குரு பெயர்ச்சி என் காரணமாக, உருவாகும், நவ பஞ்சம யோகம் சில ராசிக்காரர்களுக்கு, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
கிரகங்களின் பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரகநிலை மாற்றங்களும், சில யோகங்களை உருவாக்குகின்றன. இதனால் சில சமயங்களில் சுப பலன்களும், சில சமயங்களில் அசுப பலன்களும் ஏற்படும்.
குரு பெயர்ச்சி 2024: குருபகவான் மே மாதம் ஒன்றாம் தேதி, மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், கன்னி ராசியில் கேது இருக்கிறார். குரு கேது நிலையின் காரணமாக உருவாகும் நவபஞ்சம் யோகம், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
குரு பெயர்ச்சியினால் ஏற்படும் நவபஞ்சம யோகம், ரிஷப ராசியினருக்கு வசதி வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, ஊதிய உயர்வு பதவி உயர்வு திருப்திகரமாக இருக்கும். திறமைக்கு அங்கீகாரம் கிடைத்து, கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படலாம்.
குரு பெயர்ச்சியினால் ஏற்படும் நவ பஞ்சம யோகம் காரணமாக, சிம்ம ராசியினர் கை வைத்த காரியம் எல்லாம் வெற்றி பெறும். கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
குரு பெயர்ச்சியினால் ஏற்படும், நவ பஞ்சம யோகம் காரணமாக கன்னி ராசியினர், இது நாள் வரை சந்தித்து வந்த பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து, நிம்மதி பிறக்கும். ஊதிய உயர்வு பதவி உயர்வு, கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலையும் மகிழ்ச்சியும் நிலவும்.
விருச்சிக ராசியினருக்கு குரு பெயர்ச்சியினால் ஏற்படும் நவபஞ்சமயோகம், பணவரவை கொடுப்பதாக இருக்கும். உறவினர்கள் மூலம், ஆதாயம் இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரியின் பாராட்டினை பெறுவீர்கள். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
மகர ராசியினருக்கு, குரு பெயர்ச்சியினால் ஏற்படும் நவபஞ்சம யோகம், அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்குவதாக இருக்கும். வேலையில் தொழிலில் வெற்றியை காண்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால், திட்டமிட்டபடி பணியை முடித்து பாராட்டினை பெறுவீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.