98 மீட்டர் ஆஃப்ஷோர் ரோந்து கப்பல் வஜ்ரா இந்திய கடலோர காவல்படையின் 157 வது கப்பலாக சேர்ந்துள்ளது. மெஸ் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் கட்டமைத்த ஏழு ஆஃப்ஷோர் ரோந்து கப்பல்கள் (OPV கள்) தொடரில் ஆறாவது இடத்தில் 'இடி' (thunderbolt’) என்று பொருள்படும் வஜ்ரா இணைந்துள்ளது.
இந்திய ரோந்துப் பணியில் வலு சேர்க்கிறது. முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், கடலோர காவல்படை டி.ஜி. நடராஜன் மற்றும் பல அதிகாரிகள் வஜ்ரா கடற்படையில் சேரும் நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
Also Read | Lottery சீட்டுக்கு பணம் கொடுக்காதவருக்கும் 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை
அதிநவீன ஊடுருவல் மற்றும் தகவல்தொடர்பு உபகரணங்கள், சென்சார்கள் மற்றும் இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட இந்த கப்பல் அதன் போர்த் திறனை மேம்படுத்துவதற்காக 30 மிமீ மற்றும் 12.7 மிமீ துப்பாக்கிகளைக் கொண்டது.
2100 டன் கொண்ட இந்த கப்பல் தலா 9100 கிலோவாட் திறன் கொண்ட இரட்டை எம்டியு 8000 சீரிஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது, 5000 கடல் மைல்களை மிகவும் குறைவான எரிபொருள் செலவில் அடையக்கூடியது. இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர், மேம்பட்ட லைட் ஹெலிகாப்டர் பொருத்தப்பட்டது.
இந்த கப்பல் கடலில் எண்ணெய் கசிவு ஏற்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது.
துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலெக்ஸ் தாமஸ் தலைமையில், ஐ.சி.ஜி.எஸ் வஜ்ரா கடலோர காவல்படை கிழக்கு கடற்படையின் கீழ் வரும் 16 வது கடலோர காவல்படை மாவட்டத்தின் (தூத்துக்குடி) தளபதியின் செயல்பாட்டு மற்றும் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் தூத்துக்குடியில் நிறுத்தப்படும். இந்த கப்பல் கடற்படையில் சேருவதால், இந்திய கடலோர காவல்படையின் பலம் கூடுகிறது.