தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மதுரை அழகிரியின் சாலைப் பேரணியின் காட்சிகள்...
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், கலைஞராக அனைவராலும் அறியப்பட்ட மு.கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி இன்று மதுரையில் சாலைப் பேரணியை நடத்தினார். அவருடன் ஆதரவாளர்களும் திரளாக கூடி பேரணியில் கலந்துக் கொண்டனர். இந்த பேரணி, தமிழக அரசியலின் தேர்தல் வியூகமா? இல்லை ஆட்சி அதிகாரத்தில் தனது குடும்பத்தின் பங்குக்கான போராட்டமா? இது அரசியல் சதுரங்கத்தின் சில காட்சிகள்.
(புகைப்படங்கள்: ஏன்.என்.ஐ செய்தி முகமை)
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி (M. K. Alagiri) தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஸ்டாலின் எனக்கு துரோகம் செய்தார்?
நான் என்ன தவறு செய்தேன், ஸ்டாலின் ஏன் துரோகம் செய்தார்? அழகிரி குமுறல்
நான் என்ன தவறு செய்தேன், என்னை ஏன் கட்சியில் இருந்து விலக்கி வைத்திருக்கிறீர்கள் என்று எனது தந்தை, மு.கருணாநிதியிடம் கேட்டேன், “ஆடுபவர்கள் எல்லாம் ஆடி அடங்கட்டும், பொறுமையாக இரு” என்று சொன்னார். ஆனால் அதன்பிறகு அவரது உடல்நிலை மோசமாகிவிட்டது என்று அழகிரி பேசினார்
தான் பலருக்கு அமைச்சர் பதவியை கொடுத்திருப்பதாகவும், ஆனால் யாருக்குமே நன்றியில்லை என்றும் கூறினார். எதையும் சந்திக்க தயாராக இருங்கள் என்று கூறிய அழகிரி, நான் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருங்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார் அழகிரி.
தான் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள ஆதரவாளர்கள் தயாராக இருக்க அழகிரி அறிவுறுத்தல்
ஸ்டாலின் ஆட்சிக்க்கு வருவது ஒருபோதும் சாத்தியமில்லை