இளநீர் உடலுக்கு நல்லது என்றாலும் சிலருக்கு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே பின்வரும் பிரச்சனை உள்ளவர்கள் இளநீரை தவிர்க்க வேண்டும்.
இனிப்புகளில் இருக்கு சக்கரையை காட்டிலும் குறைவான அளவு சக்கரை இளநீரில் இருந்தாலும், அவை இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இளநீரில் இயற்கையான சக்கரை உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இளநீரை எடுப்பதற்கு முன்பு மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும்.
இளநீரில் சோடியம் குறைவாக இருந்தாலும், சிலர் அதை உட்கொண்ட பிறகும் இரத்த அழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கலாம். உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகளை உட்கொள்பவர்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
இளநீர் உண்மையில் சத்தானது என்றாலும், அதை குழந்தைகளுக்கு மிதமாக வழங்குவது அவசியம். அதிகப்படியான நுகர்வு அஜீரணம், வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சிலருக்கு தேங்காயால் ஒவ்வாமை எதிர்விளைவுகளை அனுபவிக்கலாம், அவர்களுக்கு இளநீரும் அதே போன்ற உணர்வை தரும். தோல் அரிப்பு, சொறி அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் இளநீரை தவிர்ப்பது நல்லது.
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு, அதிகப்படியான பொட்டாசியம் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். எனவே அவர்கள் தவிர்க்க வேண்டும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், தங்கள் உணவில் இளநீரை சேர்த்து கொள்ள வேண்டாம். அவற்றில் இயற்கையான சர்க்கரை உள்ளதால் மிதமாக உட்கொள்வது முக்கியம்.