7th Pay Commission: தற்போது 2024 ஆம் ஆண்டின் ஜூலை முதல் நவம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் நம்பர் மாத ஏஐசிபிஐ எண்களில் மாற்றம் ஏதும் இல்லாமல் அக்டோபரில் இருந்தது போலவே 144.5 புள்ளிகளிலேயே உள்ளது.
7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை திருத்தி அமைக்கப்படுகின்றன. பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதத்திலும் ஜூலை மாத அதிகரிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றன.
ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்புக்காக மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
7வது ஊதியக்குழு: வழக்கமாக ஜனவரி மாதத்திற்கான டிஏ உயர்வு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இந்த ஆண்டும் மார்ச் மாதத்திலேயே இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வரவிருக்கும் பட்ஜெட்டில் அரசாங்கம் இதற்கான குறிப்பை அளிக்கும் என்று நம்பப்படுகின்றது.
தொழிலாளர் அமைச்சகம் மூலம் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (Dearness Relief) ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன. முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றது.
தற்போது 2024 ஆம் ஆண்டின் ஜூலை முதல் நவம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் நம்பர் மாத ஏஐசிபிஐ எண்களில் மாற்றம் ஏதும் இல்லாமல் அக்டோபரில் இருந்தது போலவே 144.5 புள்ளிகளிலேயே உள்ளது. இதன் மூலம் ஜனவரி மாதம் அகவிலைப்படி 3% அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனினும் டிசம்பர் மாதத்திற்கான ஏஐசிபிஐ தகவல்கள் வந்தவுடன் தான் இறுதி முடிவு எடுக்கப்படும். டிசம்பர் மாத ஏஐசிபிஐ எண்கள் 0.6 புள்ளிகள் குறைந்தால் அகவிலைப்படி 55% -ஐ மட்டுமே எட்டும். எனினும் 0.5 புள்ளிகள் ஏற்றமோ அல்லது இறக்கமோ இருந்தால், டிஏ உயர்வு 3% இருப்பது உறுதி.
ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை திருத்தி அமைக்கப்படுகின்றன. பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதத்திலும் ஜூலை மாத அதிகரிப்பு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலும் அறிவிக்கப்படுகின்றன.
ஊதிய உயர்வு கணக்கீடு: ஜனவரியில் டிஏ 56% ஆக அதிகரித்தால், மாத அகவிலைப்படி = ரூ.18,000 x 56% = ரூ.10,080 ஆக இருக்கும். ஜூலை 2024: டிஏDA விகிதம் 53%. இப்போதைய அகவிலைப்படி - ரூ.18,000 x 53% = ரூ.9,540/மாதம். வித்தியாசம்: மாதத்திற்கு ரூ.540 அல்லது ஆண்டுக்கு ரூ.6,480 இருக்கும். ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 ஆக உள்ளது. அகவிலைப்படி 3% உயர்ந்தால், டிஏ உயர்வு ரூ.7,500 ஆக இருக்கும். இந்த அதிகரிப்பு ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் மற்றும் சிறந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை வழங்கும்.
மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு (Central Government Pensioners) தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகும். அகவிலை நிவாரணம் 3% அதிகரித்தால், இவற்றில் முறையே ரூ.270 மற்றும் ரூ.3,750 ஆக இருக்கும்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுகின்றது. டிஏ அதாவது அகவிலைப்படி சம்பள கட்டமைப்பில் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.