EPFO Rate Latest News: EPFO அவ்வப்போது தனது சந்தாதாரர்களுக்கு பலவித நன்மைகளை அணித்து வருகிறது. தற்போது நாட்டின் 6 கோடி EPFO சந்தாதாரர்களுக்கு சிறந்த நிவாரண செய்தி வந்துள்ளது.
2020-21 நிதியாண்டிற்கான PF வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. EPFO-வின் மத்திய அறங்காவலர் குழு (CBT) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் PF மீதான வட்டி விகிதங்கள் குறைக்கப்படக்கூடும் என்று தகவல்கள் வந்தன. ஆனால் இப்போது வாரியம் 2020-21 நிதியாண்டிற்கு வட்டி விகிதங்களை 8.5% ஆகவே நிலையாக வைத்துள்ளது. 2020 நிதியாண்டில், EPFO வருவாய் கொரோனா தொற்று, அதன் விளைவாக ஏற்பட்ட தாக்கம் மற்றும் பிற காரணங்களால் வெகுவாக பாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், EPFO 2019-20 நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 8.5 சதவீதமாகக் குறைத்தது. 2020 மார்ச் 31 க்குள் அதன் சந்தாதாரர்களுக்கு இரண்டு தவணையில் 8.5 சதவிகித வட்டி அளிகப்படும் என்றும் வாரியம் கூறியிருந்தது. 8.15 சதவீதம் கடன் முதலீடுட்டிலிருந்தும் 0.35 சதவீதம் பங்கு முதலீட்டில் இருந்தும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2020 நிதியாண்டில், EPF-ல் 8.5% வட்டி கிடைத்தது. இது 7 ஆண்டுகளில் மிகக் குறைந்த வட்டியாகும். இதற்கு முன் 2013 நிதியாண்டில், EPF வட்டி விகிதங்கள் 8.5% ஆக இருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம், EPFO வட்டி விகிதத்தை புதுப்பித்தது.
முன்னதாக, 2019 நிதியாண்டில், EPF-ல் 8.65% வட்டி கிடைத்தது. EPFO 2018 நிதியாண்டில் 8.55% வட்டி கொடுத்தது. இது 2016 ஆம் ஆண்டில் இது 8.8% ஆக இருந்தது. முன்னதாக, 2014 நிதியாண்டில் இது 8.75% ஆக இருந்தது,
EPF நாடு முழுவதும் 6 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2020 நிதியாண்டில், KYC இல் ஏற்பட்ட குழப்பம் காரணமாக கோடிக்கணக்கான மக்களுக்கு வட்டி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது.