Sunset: அந்திமாலைப் பொழுதில் வண்ணங்களின் உற்சாக விடியல்...

சூரியன் இருந்தாலும் அழகு, சென்றாலும் அழகு, செல்லும்போதும் அழகு, அதன் பயணம் என்றென்றும் முடியாதது. சூரியனின் பயணம் மட்டுமல்ல, அதன் அழகும் என்றென்றும் வெவ்வேறு வண்ணங்களில் வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது.... ஆனால், சூரியன் 60 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு செல்லும் ஒரு நகரமும் இந்த பூமியில் உண்டு தெரியுமா? அது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறதா? 

 

சூரிய அஸ்தமனம் என்பது ஒரு நாளை முடித்து வைக்க ஊதும் சங்கநாதம். அந்த நாதம் எழுப்பும் வண்ணச் சிதறல்கள் பல்வேறு கோணங்களில் பல்வேறு நிறங்களில் பார்ப்பவர் மனதை மகிழ்விப்பவை. இருக்கும் இடத்தில் நிகழும் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க வாய்க்கிறதோ இல்லையோ, உலகின் பல்வேறு இடங்களில் சூரிய அஸ்தமனத்தையும், அதன் அழகையும் இயற்கையையும் கண்டு ரசியுங்கள்...

ஒவ்வொரு குளிர்காலத்திலும் ஆர்க்டிக் வட்டத்திற்குள் உள்ள நகரங்களில்  சூரியனின் வட்டு எதுவும் அடிவானத்திற்கு மேலே தெரியாதபடி செய்கிறது. இதனால் சூரியன் தெரியாது. ஆனால் அதன் மெல்லொளி மட்டும் படரும்...  இது கதையல்ல.. நிஜம்....  இனி 2021இல் பார்க்கலாம் என்று சூரியன் Goodbye சொல்லும் ஊர் எது தெரியுமா?

1 /11

இன்று போய் நாளை வா என்ற வசனம் ஸ்ரீராமர் - ராவணன் யுத்தத்தில் ராமர் சொன்ன பிரபல வசனம். அது இந்த சூரியனுக்கும் பொருந்தும். சூரியன் ஒன்றே, ஆனால் அது ஒவ்வோரு இடத்திலும் தகிப்பதும், சுகத்தை அள்ளிக் கொடுப்பதுமாக மாறுகிறது. ஆனால் ஆர்டிக் வட்டத்தில் சூரியன் இன்று போய் நாளை வா என்ற வசனத்திற்கு செவி சாய்க்காது. அறுபது நாள் அவகாசத்திற்கு பிறகு மெதுவாக திரும்பிவரும்.  தினசரி வரும் சூரியனுக்கு மவுசு குறைச்சல் என்பதால், ஊருடன் ஒத்துப்போகாமல் ஊடல் கொண்டு பிரிந்து போய், 60 நாட்கள் கழித்து திரும்பிவரும் சூரியனின் கடைசி அஸ்தமனத் தோற்றம்...

2 /11

3 /11

இந்தச் சூரியன் இன்று போனாலும் நாளை வரும், ஆனால் நாளை உதிக்கும் சூரியன் மீண்டும் வித்தாக தோன்றி, பூவாக மலர்ந்து, உச்சிவெயிலாய் சுட்டெரித்து பின் தணலை தணித்து, மனதை குளிர்விக்கும் அந்திச்சூரியனாய் மறையும்... 

4 /11

 விழி விரித்து, வாய் மூடச் செய்யும் வண்ணக்கோலம்..

5 /11

ஆசைகள் மட்டுமா பலவிதம்? அதை எண்ணும் மனிதர்களின் விதமும் பலவிதம். அதேபோல் இயற்கையின் வண்ணங்களும் பலப்பல விதம்...

6 /11

இந்நிமிடம் இருக்கும் வண்ணம் அடுத்த நொடியில் மாறும் மாயாஜாலம்... 

7 /11

சித்திரத்தை காகிதத்தில் வரைந்து பார்க்கலாம், பூமியில் வரைந்து பார்க்கலாம். இயற்கை என்னும் ஓவியன், சூரியன் என்ற தூரிகையைக் கொண்டு வானில் வரைந்த் சித்திரம்...

8 /11

இயற்கையே பிரமிப்பை கொடுப்பது என்றாலும், நிறங்கள் கொடுக்கும் ஆச்சரியம் அளப்பரியது...

9 /11

சொர்க்கத்திற்கு செல்ல முடியாது. நினைத்து பார்த்து, பார்த்துப்பார்த்து ரசிக்கலாம்...

10 /11

நிறங்களை எண்களில் அடக்கிவிட முடியுமா? பொதுவாக வண்ணங்களை வகைக்குள் அடக்கி வரம்பு கட்டிவிட முடியுமா என்ன?

11 /11

அழகு என்பது பார்ப்பவர் கண்களில் இருப்பது..ஆனால், இந்த சூரிய அஸ்தமனத்தை பார்க்கும் யாரும் அழகு இது என்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் தவிக்க வைக்கும் அழகு... பேரழகு...