Rahu Shani Nakshatra Gochar 2024: நிழல் கிரகமான ராகு, ஜூலை 5 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரத்தைத் தொடங்கினார். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ராகு இருப்பதுபோலவே, ராகுவின் நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் சனி இருப்பதும், நட்சத்திர பரிவர்த்தன ராஜயோகத்தை உருவாக்குகிறது.
ராகுவும் சனியின் வீட்டை மாற்றிக் கொண்டால், நாலு ராசிக்காரர்களுக்கு கொண்டாட்டம் தான்... ஆனால் பாவம், மீதமுள்ள 8 ராசிகளுக்கு திண்டாட்டம் தான்...
சனி-ராகு உருவாக்கிய அபூர்வமான பரிவர்த்தனை யோகம், 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான செல்வம் கிடைக்கும், எதிரிகள் காலடியில் வந்து விழுவார்கள். அப்படிப்பட்ட ராஜயோகம் இது
ஜோதிடத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாக பார்க்கப்படும் ராகு தற்போது சனியின் நட்சத்திரத்தில் இருக்கிறார்
ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரர், ராகுவின் நட்சத்திரத்தில் பயணிக்கிறார், இந்த இரண்டு கிரகங்களின் நட்சத்திர பரிவர்த்தனையால் நாலு ராசிக்கார்களின் குடும்பமே மகிழ்ச்சியடையும் அந்த நாலு ராசிகள் எவை? தெரிந்துக் கொள்வோம்
கும்ப ராசிக்காரர்களுக்கும் இந்த யோகம் நல்லது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் நன்மைகள் கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிவர்களுக்கு நல்ல காலம் இது உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும். பயணங்கள் இனிமையானதாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும்
வருமானம் அதிகரிப்பதால்பொருளாதார நிலை முன்னேறும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. குழந்தைகள் மூலம் நல்லச் செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும்
சனி, ராகு இருவருமே ரிஷப ராசியினருக்கு நல்லது செய்வார்கள். வாழ்க்கையில் திடீரென்று மாறுதல்கள் வரும். உங்களின் ஒவ்வொரு செயலும் வெற்றியைத் தேடித் தரும். புதிய மூலங்களிலிருந்து பணம் வரும். உயர் பதவி, புதிய வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு போன்ற தொழில் துறையில் பெரிய மாற்றம் ஏற்படும்.
இந்த பரிவர்த்தனை யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் சீராகும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். ராகு உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வருவார், வெளிநாட்டு வேலை கனவு நனவாகும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது