Health Tips: உங்களின் தொப்பை கொழுப்பை குறைக்க, காலையில் எழுந்ததும் வெந்தய நீர், இஞ்சி சாறு ஆகியவற்றை எதை குடிப்பது கூடுதல் நன்மையை தரும் என்பதை இதில் காணலாம்.
உடல் எடையை குறைப்பதில் சில பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். அந்த பழக்கவழக்கங்களின் பின்னுள்ள விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைப்பது ஆரோக்கியமாக முறையில் இருக்க வேண்டும். உடற்பயிற்சிகள், உணவுகள் ஆகியவை ஒருபுறம் இருக்க அன்றாட பழக்கவழக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.
குறிப்பாக, சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். வீட்டில் சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுபோன்ற சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது நல்லது.
அந்த வகையில், உங்களின் தொப்பையின் கொழுப்பை குறைக்கவும் காலையில் எழுந்தவுடன் சில பானங்களை குடிப்பது நல்ல பலம் அளிக்கும். அதில், வெந்தயம் ஊறவைத்த நீரும், இஞ்சி சாறும் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
வெந்தயம் ஊறவைத்த நீரும், இஞ்சி சாறும் உங்களின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி, செரிமானத்தை சீராக்கும். பசியை தூண்டும். மேலும், உடல் எடையை குறைக்க அதாவது தொப்பை கொழுப்பை கரைக்க அதிக பலனை தரும். அந்த வகையில் இந்த இரண்டு பானங்களின் நன்மைகளை இங்கு காணலாம்.
இஞ்சி சாறு: இஞ்சி உங்கள் உடலின் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிக்கிரது. இது ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும். இஞ்சி சாறு வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உங்களுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி அதில் காலோரிகளையும் எரிக்கும். இது செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வளிக்கும். குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகளை போக்கும். ஆரோக்கியமான செரிமான அமைப்பு உருவாக்கும்.
வெந்தயம் நீர்: வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து அதனை வடிக்கட்டி இதனை அருந்த வேண்டும். வயிற்றில் உப்புசம் போன்ற பிரச்னை மற்றும் செரிமானக் கோளாறுகளை நீக்கும். இதில் அதிக ஃபைபர் தன்மை இருக்கிறது. அதேபோல் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளால் வயிற்றை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும். இது ஒட்டுமொத்த செரிமான அமைப்புக்கு நல்லது. இதில் உள்ள கரையக்கூடிய ஃபைபர்கள் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும். இதன்மூலம் இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது. இது உங்களின் பசியையும் கட்டுப்படுத்தி எடை அதிகரிப்பதை தடுக்கும்.
இரண்டும் தொப்பை கொழுப்பை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இஞ்சி சாறு உடலின் சூட்டை ஏற்படுத்தும் என்பதால், அதிக ஃபைபர்களை கொண்ட வெந்தய நீர் என்பது உடல் எடையை குறைப்பதில் கூடுதல் நன்மையை தரும் எனலாம். இருப்பினும், உடல் எடை குறைப்புக்கு இரண்டில் எதை குடிக்கலாம் என்பது அவரவர் விருப்பமாகும்.
(பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை)