7th CPC DA Hike Latest Update : அடுத்த மாதம் ஜூலையில் டிஏ உயர்வு 4 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாத ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில், அகவிலைப்படி 50.84 சதவீதமாக உள்ளது.
பணவீக்கம், விலைவாசி உயர்வு என பண மதிப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும் ஓய்வூதியதாரர்களுக்கு (Pensioners) அகவிலை நிவாரணமும் (Dearness Relief) அளிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு இரண்டு முறை இது திருத்தப்படுகின்றது.
மத்திய ஊழியர்களுக்கு ஒரு பெரிய செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த சம்பள கமிஷன் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு, ஆனால் அரசு அடிப்படை சம்பளத்தில் பெரிய ஏற்றத்தை கொண்டு வரலாம்
மத்திய ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000க்கு பதிலாக ரூ.21,000 ஆக நிர்ணயிக்க நிதி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக ஊகிக்கப்படுகிறது.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச ஊதியம் நிலை-1 ஊழியர்களுக்கானது. வெவ்வேறு ஊதியக் குழுக்கள் மற்றும் நிலைகளில் சம்பளம் வேறுபட்டது. ஆனால், அங்கேயும் அதே விகிதத்தில் சம்பளம் அதிகரிக்கிறது.
எட்டாவது சம்பள கமிஷனை அமல்படுத்துவதற்கு பதிலாக, அடிப்படை சம்பளத்தை நேரடியாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய மாற்றம் வரலாம்.
7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில், ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்காக வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டது
ஃபிட்மென்ட் காரணியை 3.68 மடங்குக்கு மாற்றலாம் என்ற விவாதம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.27,000 ஆக அதிகரிக்கலாம்
அடிப்படை சம்பளத்தை ஏன் உயர்த்த வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது. பணவீக்கம் அதிகரித்து வருவதால் மத்திய ஊழியர்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. அடிப்படை சம்பள உயர்வால் அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது