Rohit Sharma: ஐபிஎல் 2024ல் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.
2024 ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது.
இதனால் கடந்த ஆண்டு முழுவதும் அணியில் நிறைய பிரச்சனைகள் உருவானது. ஹர்திக் பாண்டியனை சொந்த அணி ரசிகர்களே திட்ட ஆரம்பித்தனர்.
மேலும் அடுத்த ஆண்டு ரோஹித் சர்மா மும்பை அணியில் தொடர் மாட்டார் என்றும் வேறு அணியில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில் ரோஹித் சர்மா ஏலத்திற்கு வருவாரா? அல்லது எந்த அணி அவரை வாங்க முயற்சிக்கும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மும்பை அணி ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஆகியோரை தக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2025க்கு முன்பு மும்பை அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தலைமைப் பயிற்சியாளராக மார்க் பவுச்சருக்குப் பதிலாக மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.