எம்ஜி மோட்டார் இந்தியா வியாழக்கிழமை காலை 11 மணிக்கு எம்ஜி ஆஸ்டருக்கான முன்பதிவுகளைத் திறந்தது. தகவலின் படி, எஸ்யூவி முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது. 20 நிமிடங்களுக்குள் 5000 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டன.
இந்த எஸ்யூவியின் விநியோகம் நவம்பர் 1, 2021 முதல் தொடங்கும் மற்றும் எம்ஜி இந்த வருடத்திற்குள் 5000 யூனிட்களை வழங்கும் இலக்கை நிர்ணயித்துள்ளது.
எம்ஜி ஆஸ்டரின் ஆரம்ப விலை 9,78,000 ரூபாய் ஆகும்.
எம்ஜி ஆஸ்டர் இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் வரும்-பிரிட் டைனமிக் 220 டர்போ பெட்ரோல் இன்ஜின் 6 ஸ்பீடு ஏடி உடன் 220 என்எம் டார்க் மற்றும் 140 பிஎஸ் பவரை வழங்குகிறது. மற்றும் மற்றொன்று-மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 8 ஸ்பீடு சிவிடி கொண்ட விடிஐ டெக் பெட்ரோல் எஞ்சின், 144 என்எம் டார்க் மற்றும் 110 பிஎஸ் பவரை வழங்குகிறது.
ஆஸ்டர் எம்ஜியின் பிரபல ZS ஐ அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறங்கள் பிரீமியம் பொருட்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
எம்ஜி ஆஸ்டர் AI தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்தியாவின் முதல் எஸ்யூவி ஆகும்.
இஎஸ்பி, டிசிஎஸ் மற்றும் எச்டிசி போன்ற 27 நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவத்தை இந்த கார் உறுதி செய்கிறது. பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள்,அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கைகள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், சென்சிங் வைப்பர், 7 இன்ச் உட்பொதிக்கப்பட்ட எல்சிடி திரையுடன் முழு டிஜிட்டல் கிளஸ்டராக வந்துள்ளது எம்ஜி ஆஸ்டர்