சனி வக்ர பெயர்ச்சி 2024: சனி பகவான் ஜூன் 29, 2024 அன்று, கும்ப ராசியில் வக்ர நிலையை அடைந்தார். இந்நிலையில், வருன் ஆகஸ்ட் 18 அன்று, சனி பகவான் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் வக்ர பெயர்ச்சி அடைவார். இதுபோன்ற சூழ்நிலையில், அடுத்த மாதம் வரை, சில ராசிக்காரர்கள் வாழ்க்கையின் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சனி பகவானின் வக்ர பார்வை காரணமாக கெடுபலன்களை அனுபவிக்கும் சில ராசிகள், கவனமாக இல்லை என்றால், பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்கள் எச்சரிக்க்கையாக இருப்பதுடன், சில பரிகாரங்களை மேற்கொண்டு சனீஸ்வரனை வழிபடுவது நல்லது.
சனி வக்கிரப் பெயர்ச்சி: அண்மையில் சனி வக்கிரப் பெயர்ச்சி நடைபெற்றது. கடந்த 2024 ஜூன் 29ம் தேதி முதல் சனி எதிர்திசையில் வலம் வரத் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த மாற்றம், சிலருக்கு பாதகமானதாகவும் பலருக்கு சாதகமானதாகவும் இருக்கும். எனுனும் சில பரிகாரங்கள் செய்வதாலும், சனி பகவானை வழிபடுவதாலும், அவர் அருள் பரிபூரணமாக கிடைத்து, நன்மைகளை அடையலாம்.
மேஷம்: தொழிலதிபர்கள், அலுவலக பணியில் இருப்பவர்கள் பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்கலாம். அதீத சிந்தனை ஆரோக்கியத்தை பாதிக்கும். முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.
துலாம்: முதலீடு செய்த பணத்தை இழக்க நேரிடலாம். வணிகர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. செலவுகள் அதிகரிப்பதால், நிதி நிலைமை மேலும் பாதிக்கப்படும். பணப் பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனம் வேண்டும். இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம்.
விருச்சிகம்: பண வரவு திருப்திகரமாக இருக்காது. எனவே செலவுகளை குறைக்க வேண்டும். இல்லையெனில், படிப்படியாக சேமித்த முதலீடுகள் காணாமல் போய்விடும். இதன் காரணமாக நீங்கள் எதிர்காலத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும்.
கும்பம்: தாயின் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், மருத்துவ செலவு அதிகமாகலாம். செலவுகள் அதிகரிக்கும். இதனால், நிதி நிலையில் பாதிப்பு ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே பேச்சில் எச்சரிக்கை தேவை.
மீனம்: வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இல்லையெனில், விபத்து ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. திருமணமானவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்வார்கள்.இதனால் வீட்டில் பதட்டமான சூழல் இருக்கும். வேலையில் கவனக்குறைவு காரணமாக வேலை பறி போகும் வாய்ப்பு உண்டு.
சனி பரிகாரங்கள்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு உகந்த நாள். அன்று, எள் சாதத்தை சமைத்து, அன்னதானம் கொடுப்பது, காக்கைக்கு உணவிளிப்பது ஆகியவை, சனி பகவானின் அருளைப் பெற்றுத் தரும். சனிபகவானுக்கு எள்ளெண்ணெய் கொண்டு தீபம் போடுவது சனியின் வக்ரப் பெயர்ச்சியின் தாக்கத்தை குறைக்கும். சனிக்கிழமை தோறும் அனுமானை வழிபட்டால், சனி பகவானின் அருள் கிடைக்கும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.