Budget Expectations On Bank SB A/C Interest : பொதுமக்கள், வங்கியில் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கில் உள்ள வங்கி இருப்புக்கு அதிக வட்டி கிடைத்தால், அது கட்டமைப்புத்துறை வலுப்படுத்தும் என்று எஸ்பிஐ தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்....
புதிய அரசு பொறுப்பேற்றிருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் பட்ஜெட்டில் மக்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்ற கேள்விக்கு, வங்கியில் சேமிப்புக் கணக்கிற்கான வட்டி அதிகமாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது...
எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு 46 முதல் 179 நாட்கள் வரையிலான சில்லறை டெபாசிட்டுகளுக்கு, முந்தைய 4.75 சதவீதத்திற்கு எதிராக 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.50 சதவீதமாக வழங்குகிறது
இன்னும் சில நாட்களில் பட்ஜெட் வரவிருக்கும் நிலையில் வங்கி வட்டி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன
வட்டி வருவாய் மீதான வரி தொடர்பாக பட்ஜெட்டில் சிறிது நிவாரணம் வழங்கினால், அது டெபாசிட் செய்பவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். அது, நாட்டின் மூலதன உருவாக்கத்திற்கு நிதியளிக்க வங்கிகளுக்கு உதவும் என எஸ்பிஐ சேர்மன் தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார்
எனவே, பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கி வட்டி தொடர்பான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவாரா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்
சேமிப்புக் கணக்குகளைப் பொறுத்தவரை, 10,000 ரூபாய் வரை கிடைக்கும் வட்டிக்கு வரி விலக்கு உண்டு
டெபாசிட்களைப் பொறுத்த வரையில், கடந்த ஆண்டு 11 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது