Kidney Health Symptoms VS Urine: உங்கள் சிறுநீரகங்கள் நன்றாக வேலை செய்கிறதா? இதற்கு ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சிறுநீரில் தோன்றக்கூடிய அறிகுறிகளை வைத்தே சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைத் தெரிந்துக் கொள்ளலாம்.
சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்ற உதவும் அத்தியாவசிய உறுப்பு ஆகும். இது உடலின் முழு செயல்பாட்டிலும் மிக முக்கியமான படிகளில் ஒன்றாகும்
சிறுநீரகங்கள் சேதமடைந்தாலோ அல்லது சேதமடையத் தொடங்கினாலோ உடலின் இரத்தத்தை வடிகட்டும் செயல்முறைகள் மந்தமாகின்றன. இதனால் உடலில் கழிவுப் பொருட்கள் மற்றும் நச்சுகள் குவிவதற்கு தங்கி நாளடைவில் ஆரோக்கியம் சீர்கெடும்.
உடலின் கழிவான சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், சிறுநீரக பாதிப்பைக் குறிக்கும் அறிகுறியை காட்டிவிடும். ஆனால் அதை நாம் தான் கவனிப்பதில்லை. சிறுநீரக பாதிப்புகளை காட்டும் சிறுநீரில் ஏற்படும் மாற்றங்களில் இந்த 5 முக்கியமானவை. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்
சிறுநீரில் துர்நாற்றம் இருந்தால், சிறுநீரகங்கள் சில நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது சிறுநீரக பாதிப்பு அல்லது தொற்றுநோயைக் குறிக்கலாம், இது எளிதில் கவனிக்கக்கூடிய ஒன்று. ஆனால், இதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அதேபோல, சிறுநீர் வாசனையும் நபருக்கு நபர் மாறுபடும். எனவே, உங்கள் உடலைப் புரிந்துகொள்வதும், அதில் நடக்கும் வழக்கத்திற்கு மாறான விஷயங்களை உன்னிப்பாக கவனிப்பது அவசியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உங்கள் சிறுநீரின் நிறத்தில் திடீரென்று ஏற்படும் மாற்றம் உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்று சொல்கிறது. பொதுவாக, சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறுநீரின் நிறம் வழக்கமான நிறத்தை விட அடர்த்தியாக அல்லது அதிக மஞ்சளாக இருக்கும். இது சிறுநீரக தொற்று அல்லது சிறுநீரக கற்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
சிறுநீர் ரத்த நிறத்தில் சிவந்திருப்பதை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். சிறுநீரில் இரத்தத்துளிகள் கலந்திருக்கலாம். இது சிறுநீரகப் பாதிப்பைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால், சிறுநீரகங்கள் அல்லது சிறுநீர் பாதைக்குள் இரத்தப்போக்கு ஏற்படலாம், இது சிறுநீருடன் இரத்தம் வர வழிவகுக்கும்.
உங்கள் சிறுநீரில் தோன்றும் சிறுநீரகப் பாதிப்பின் முதல் அறிகுறி, அமைப்புமுறையில் ஏற்படும் திடீர் மாற்றமாகும். சிறுநீர் நுரையாக வருவது, சிறுநீரில் புரதம் கலந்து வருவதை குரிக்கிறது. பொதுவாக சிறுநீரில் புரதம் இருக்காது, இந்த அறிகுறி ஏற்பட்டால் உங்கள் சிறுநீரகங்கள் கடுமையான ஆபத்தில் இருப்பதைக் குறிக்கலாம்
சிறுநீரின் நிறத்தை அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருங்கள். இது மிகப் பெரிய ஆபத்தை சரியான நேரத்தில் சொல்லும் ஆபத்பாந்தவனாக இருக்கலாம்.