Superfood Veg: வாழைக்காய் தீர்க்கும் 5 நோய்கள்... நோயாளிகளுக்கு அருமருந்தாகும் வாழை

Raw Banana Benefits: வாழைப்பழம் மட்டுமல்ல, வாழைக்காயும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள வாழைக்காய், பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.

வாழைக்காய், சைவ உணவுக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. சமைத்து சாப்பிட்டால், ருசியாக மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்....

1 /8

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவும் வாழைக்காயில் உள்ள சத்துக்கள் இதய ஆரோக்கியம் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் நன்மை பயக்கும். ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், வாழைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்

2 /8

வாழைக்காயை, சிப்ஸ், பஜ்ஜி என சமைத்து சாப்பிடலாம். வாழைக்காயை (Raw Banana Benefits). விதவிதமாய் சமைத்து உண்ணலாம். வாழைக்காயை உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்..

3 /8

சிப்ஸாக வாழைக்காயை உண்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும், கேரளாவில் செய்வது போல, தேங்காய் எண்ணெயில் வாழைக்காய் சிப்ஸ் செய்து, தீனியாக உண்பது ஒரு நல்லத் தெரிவாக இருக்கும். வாழைக்காயின் பல்வேறு மருத்துவ பண்புகளையும் பெற இது உதவும்

4 /8

நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைக்காய் மிகவும் நல்லது. கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால் வாழைக்காய் சாப்பிட்ட பிறகு, இன்சுலின் ஹார்மோன் மெதுவாக வெளியிடப்படுகிறது என்றும் சொல்லலாம். வாழைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம்.

5 /8

வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது, மாரடைப்பு, பக்கவாதம் வருவதை தடுக்கும் வாழைக்காய், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் இதயத்தை நீண்ட ஆயுளுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், வாழைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்  

6 /8

நார்ச்சத்து நிறைந்துள்ள வாழைக்காயை உட்கொள்வதன் மூலம் உங்கள் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம். நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிகரித்து வரும் எடையைக் குறைக்கலாம்

7 /8

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து, வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு, வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் உணவு விரைவாக செரிமானமாகும்.  

8 /8

வைட்டமின் சி, வைட்டமின் பி, ஈ, கே போன்ற பல வகையான வைட்டமின்கள் கொண்ட வாழைக்காய், உடலில் பல நொதி செயல்முறைகளுக்கு உதவுகிறது மற்றும் நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.