Udyogini: பெண்கள் சுயமாக தொழில் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசின் கீழ் வங்கிகள் வட்டியில்லாத கடனை வழங்குகிறது.
இந்தியாவில் பெண்களுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் யார் உதவியும் இன்றி சொந்த காலில் நிற்க இந்த திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளன.
பெண்களுக்கான சிறந்த திட்டங்களில் ஒன்று தான் உத்யோகினி திட்டம். மத்திய அரசின் அறிவுரைப்படி வங்கிகள் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன. இந்த திட்டத்தின் கீழ் சிறிய, தொழில் கடன் மற்றும் விவசாய கடனைப் பெற முடியும்.
இந்த உத்யோகினி திட்டத்தின் கீழ் பெண்கள் வட்டி இல்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெற முடியும். 88 வகையான சிறு தொழில்களை இதன் மூலம் செய்யலாம். மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் விதவைகளுக்கு கடன் உச்ச வரம்பு இல்லை.
உத்யோகினி திட்டத்தின் கீழ் பெண்கள் கடன் கடன் பெறுவதற்கு அவர்கள் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். சுயமாக தொழில் தொடங்குவோருக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும்.
ஏற்கெனவே தொழில் செய்து வந்தாலும் கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், தலித் இனப் பெண்களுக்கு வட்டி இல்லா கடனும், பிற வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வட்டியும் விதிக்கப்படும்.