உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட தொப்பி! 2.1 அமெரிக்க டாலர்களுக்கு விற்ற Hat! வைரல் வீடியோ

Napoleon Bonaparte Hat Auction: பிரெஞ்சு பேரரசர் நெப்போலியன் பயன்படுத்திய தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போனது. நெப்போலியனின் தொப்பி சரித்திரத்தில் இடம் பெற்ற ஒன்று. பிரான்ஸ் பேரசரர் நெப்போலியனை தொப்பியுடனே பார்க்க முடியும்.

பைகார்ன் என்று அழைக்கப்படும் தொப்பியின் ஏலம், 2014 ஆம் ஆண்டில் இதே ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட நெப்போலியன் தொப்பிக்கான முந்தைய சாதனையை முறியடித்தது. இது தென் கொரிய தொழிலதிபரால் 1.88 மில்லியன் யூரோக்களுக்கு ($2.05 மில்லியன்) வாங்கப்பட்டது.

1 /7

பிரான்சின் முன்னாள் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் தொப்பி ஞாயிற்றுக்கிழமை பாரிஸில் நடந்த ஏலத்தில் 1.932 மில்லியன் யூரோக்கள் ($2.1 மில்லியன்) என்ற சாதனை விலைக்கு விற்கப்பட்டது.

2 /7

பைகார்ன் என்று அழைக்கப்படும் தொப்பியின் ஏலம், 2014 ஆம் ஆண்டில் இதே ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட நெப்போலியன் தொப்பிக்கான முந்தைய சாதனையை முறியடித்தது. இது தென் கொரிய தொழிலதிபரால் 1.88 மில்லியன் யூரோக்களுக்கு ($2.05 மில்லியன்) வாங்கப்பட்டது. தற்போது இதை விட அதிக விலைக்கு இந்தத் தொப்பி ஏலம் போனது

3 /7

ஏலதாரர் Jeane-Pierre Osenat இன் கூற்றுப்படி, கருப்பு நிற தொப்பி - பிரெஞ்சுக் கொடியின் நீலம்-வெள்ளை-சிவப்பு நிறங்களை அடையாளமாகக் கொண்டுள்ளது - இது "உலகம் முழுவதும்" சேகரிப்பாளர்களிடமிருந்து ஆர்வத்தை ஈர்த்தது.

4 /7

இந்த ஏலத்தில் தொப்பியை வாங்குபவரின் அடையாளம் தெரிவிக்கப்படவில்லை. தொப்பி கடைசியாக கடந்த ஆண்டு இறந்த தொழிலதிபர் ஜீன்-லூயிஸ் நொய்சிஸுக்கு சொந்தமானதாக இருந்தது.

5 /7

இறுதி விலை முன்பதிவு செய்யப்பட்ட விலையை விட நான்கு மடங்கு அதிகம்  

6 /7

தொப்பி ஆரம்பத்தில் 600,000 முதல் 800,000 யூரோக்கள் ($655,00 முதல் $873,000) வரை மதிப்பிடப்பட்டது, ஆனால் இறுதி விலை மதிப்பீட்டை விட இருமடங்கு மற்றும் கிட்டத்தட்ட நான்கு மடங்கு இருப்பு விலைக்கு சென்றது என்று பாரிஸின் தெற்கே உள்ள ஃபோன்டைன்ப்ளூவை தளமாகக் கொண்ட ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

7 /7

நெப்போலியன் 15 ஆண்டுகளில் மொத்தம் 120 தொப்பிகளை வைத்திருந்ததாக நம்பப்படுகிறது, அவற்றில் பெரும்பாலானவை இப்போது தொலைந்துவிட்டன.