கோடைக்காலத்தில் உடலில் அதிக வியர்வை சுரக்கும். இது போன்ற சமயங்களில் பெர்பியூம் வாசனை வியர்வையால் வரும் துர்நாற்றத்தை போக்கும்.
தற்போது கோடைகாலத்தில் பலரும் அதிக வெப்பத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர். இந்த சமயத்தில் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறும்.
உடலில் இருந்து வெளியேறும் வியர்வை காரணமாக துர்நாற்றம் வர அதிக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க பலரும் வாசனை திரவியங்களைப் பயன்படுத்துகின்றனர்.
ஆனாலும் அவற்றின் வாசனை நீண்ட நேரம் நிலைப்பதில்லை. ஏனெனில் அதிக வெப்பத்தால் நீண்ட நேரம் அவற்றின் நறுமணத்தை பராமரிப்பது மிகவும் கடினம்.
ஒருசிலருக்கு வாசனை திரவியம் பயன்படுத்தினால் தலைவலியும் வரும். இதனை தவிர்க்க சரியான வாசனையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். அப்படி இல்லை என்றால் வாசனை திரவியங்கள் கொண்ட சோப்புகள் பயன்படுத்தலா.
இதன் மூலம் உடலில் வாசனை நீண்ட நேரம் இருக்கும். நாள் முழுவதும் நறுமணம் நிலைத்து இருக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவது நல்லது.
வெறும் பெர்ஃப்யூம் கலந்த பாடி லோஷனை பயன்படுத்தினால், வாசனை சீக்கிரம் போய்விடும். எனவே, வாசனையுடன் சோப்பு, க்ரீம் போன்றவற்றை சேர்த்து பயன்படுத்துவது சிறந்தது.
கழுத்து, மணிக்கட்டு, முழங்கால்களுக்கு பின்னால் மற்றும் காதுகளுக்கு பின்னால் வாசனை திரவியத்தை பயன்படுத்துங்கள். இதன் மூலம் நீண்ட நேரம் அதன் வாசனை உங்கள் உடலில் இருக்கும்.