2023ம் ஆண்டின் காதலர் தினம் நெருங்கிவிட்டது, ஒவ்வொருவரும் தங்களது காதலருக்கு வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
VALRHONA: பிரான்சில் உள்ள அழகிய, சிறிய நகரமான டெய்ன் எர்மிடேஜில் உள்ள தனித்துவமான சுவையுடைய சாக்லேட் தான் இது. இந்த சாக்லேட் நிச்சயமாக உங்கள் துணைக்கு மிக ஆடம்பரமான பரிசாக இருக்கக்கூடும்.
NEUHAUS: பெல்ஜியத்தில் இந்த சாக்லேட் சுவைக்கு ஈடாக வேறு எந்த சாக்லேட்டும் இல்லை என்றே சொல்லலாம். நியூஹாஸ் என்பர் கண்டுபிடித்த இந்த சாக்லேட் கண்டிப்பாக காதலர் தினத்துக்கு ஒரு சிறப்பான பரிசாக இருக்கும்.
GODIVA: சுவையான சாக்லேட் மற்றும் காபி தயாரிப்புகளை உருவாக்குவதில் கோடிவா முன்னணி வகிக்கிறது. ஹேசல்நட் க்ரீம், சாக்லேட் ட்ரூஃபே, கேரமல் போன்றவற்றின் தரமான கலவையுடன் இந்த சாக்லேட் உங்களுக்கு உயர்ந்த தரத்தில் கிடைக்கிறது.
WHITTAKERS: இந்த சாக்லெட்டை விட வேறு சிறப்பான சாக்லேட் எதையும் உங்களல்ல நியூசிலாந்தில் கண்டுபிடிக்க முடியாது. டார்க் கானா மற்றும் பெப்பர்மின்ட் முதல் பெர்ரி மற்றும் பிஸ்கட் வரை பல சுவையுடைய பொருட்கள் இங்கு தயாரிக்கப்படுகிறது.
E WEDEL: போலந்தின் மிகவும் பிரபலமான பிராண்டுகளில் ஒன்றான இந்த நிறுவனத்தில் சாக்லேட் காதலர் தினத்துக்கு சிறப்பான பரிசாக இருக்கும். இந்த சாக்லேட்டின் தனிப்பட்ட சுவை உங்கள் துணைக்கு உங்கள் மீது அன்பை அதிகரிக்கும்.