"நெஞ்சு பொறுக்குதில்லையே" பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது என்று பேசியுள்ளார். இதுகுறித்து முழு விவரம் இங்குப் பார்ப்போம்.
மகாகவி பாரதியார் எழுதிய வரிகளில் முக்கிய வரிகள் நெஞ்சு பொறுக்குதில்லையே என்பதுதான். இந்த வரியைக் கேட்டால் அனைவருக்கும் உடம்பில் மெய்சிலிர்க்க வைக்கும். இப்படிப்பட்ட வரிகளைத் தேர்வு செய்து படத்திற்கு வைத்துள்ள தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கூறி பல கருத்துக்கள் கூறியுள்ளார். இதுகுறித்து அனைத்தும் இங்குப் படிக்கவும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நெஞ்சு பொறுக்குதில்லையே விழாவில் கலந்துகொண்டு மகாகவி பாரதி பாடிய வரிகளில், மிக முக்கியமானது நிலைகெட்ட மாந்தரை நினைக்கையில், இந்த நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற வரிகள்தான், அந்த வரியைத் தலைப்பாக வைத்த படக்குழுவிற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
"நெஞ்சு பொறுக்குதில்லையே" படத்தை கவிதினேஷ்குமார் இயக்கியுள்ளார். இந்த படம் நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், மகாகவி பாரதி வரிகளில் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ளது.
அதைச் சரியாகச் சிந்திக்கும் படைப்பாளிகளால் தான் இந்த படைப்பைத் தர முடியும். உரையாடலுக்கு ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. திரைத்துறையில் சனாதன சக்திகள் ஓங்கி விடக்கூடாது. முற்போக்கு சிந்தனையாளர்கள் திரைத்துறையில் வரவேண்டும் எனவும் உணர்ச்சியாகப் பேசியது அங்கிருந்த பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார்.
இவர்கள் அந்த காதலை வணிக சந்தையாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான உந்து சக்தியாகப் பார்க்க வேண்டும். காதல் எல்லா மனிதருக்கும் இருக்கிறது என்று காதல் குறித்துப் பேசியுள்ளார்.
இன்றைய தலைமுறையிடம் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. காதல் உலகம் முழுக்க இருக்கக் கூடிய கருப்பொருள். இன்னும் இன்னும் பல ஆயிரம் படங்கள் இந்த கருப்பொருளில் வந்துகொண்டே இருக்கும்.
பெண்களை வெறும் பொருளாக மட்டும் பார்க்கக்கூடாது. அவர்களைக் கவர்ச்சியாகக் காட்டி படத்தை ஓட வைத்துவிடலாம் எனத் தயாரிப்பாளரோ இயக்குநரோ நினைத்து விடக்கூடாது என்று அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
காதல் இயல்பான பண்பு அதைச் செயற்கையாக உருவாக்கி விட முடியாது. அது ஆழமான உணர்வு, நுட்பமான உணர்வு. காதலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது, என்பது தான் முக்கியம். அதைக் கலைஞர்கள் நுட்பமாகக் கவனித்து அதை சமூகத்திற்கு முக்கியமான படைப்பாக மாற்ற வேண்டும்.
காதல் அவர்களுக்குத் தரும் அழுத்தம் தான் அவர்களைச் சாதி தாண்டிய காதலைக் குற்றமாகப் பார்க்க வைக்கிறது. இதில் பெண் குற்றவாளியாக்கப்படுகிறாள். இதை விவாதிக்க வேண்டிய தேவை இங்கு இருக்கிறது.