விராட் கோலி கட்டிப்பிடித்து நவீன் உல் ஹக்கிடம் சொன்னது இதுதான்

விராட் கோலி கட்டிப்பிடித்து நவீன் உல் ஹக்கிடம் சொன்னது இதுதான் 

 

’lets finish it..’ கிரிக்கெட் களத்தில் அண்மைக்காலமாக வைரிகளாக இருந்த விராட் கோலியும், நவீன் உல் ஹக்கும் சமாதானத்துக்கு வந்துள்ளனர்.

 

1 /10

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே உலக கோப்பை லீக் போட்டி டெல்லி அகமதாபாத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  

2 /10

அத்துடன் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக்கின் முட்டல் மோதலும் முடிவுக்கு வந்தது. ஆம், இருவரும் மைதானத்திலேயே கட்டிப்பிடித்து சமாதானத்தை தெரிவித்துக் கொண்டனர்.   

3 /10

இருவருக்கும் இடையே ஐபிஎல் போட்டியின் போது மோதல் ஏற்பட்டது. விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் கடுமையான சொற்களை பயன்படுத்தி வசைபாடிக் கொண்டனர்.  

4 /10

அப்போது முதல் இருவருக்கும் இடையே முட்டல் மோதல் இருந்து வந்தது. நவீன் உல் ஹக், விராட் கோலி மீதான கோபத்தை அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வந்தார்.  

5 /10

உலக கோப்பை போட்டியின்போது, அவர்களின் மோதல் தொடரும் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நவீன் உல் ஹக் களத்தில் இருக்கும் சமயத்தில் அவரை நோக்கி விராட் கோலி..... விராட் கோலி என முழக்கம் எழுப்பி அவரை கடுப்பேற்றினார்கள்.  

6 /10

நவீன் உல் ஹக் பேட்டிங் செய்ய வரும்போது ரசிகர்கள் அவ்வாறே கத்திக் கூச்சலிட்டனர். சேஸிங்கில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நவீன் உல் ஹக் பந்துவீச வந்தார். அப்போது விராட் கோலி பேட்டிங் செய்தார்.  

7 /10

அப்போதும் ரசிகர்கள் விராட் கோலி என முழக்கம் எழுப்பி நவீன் உல் ஹக்கை கடுப்பேற்றினார்கள். ஒரு பிளேயராக விராட் கோலிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. உடனே ரசிகர்களை நோக்கி அவ்வாறு கத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.  

8 /10

விராட் கோலியின் இந்த செயலைப் பார்த்து நவீன் உல் ஹக் நெகிழ்ச்சியடைந்தார். பின்னர் மைதானத்திலேயே இருவரும் கட்டியணைத்து சமாதானத்தை தெரிவித்துக் கொண்டனர்.  

9 /10

போட்டிக்கு பிறகும் பேசிக் கொண்டனர். இதனையடுத்து பேசிய நவீன்உல் ஹக், விராட் கோலி என்னிடம் வந்து ’lets finish it..’ என கூறினார். நானும் அதற்கு இசைவு தெரிவித்தேன்.  

10 /10

எது நடந்ததோ அது மைதானத்துக்குள் மட்டுமே, வெளியே விராட் கோலி மீது கோபம் ஏதும் இல்லை என நவீன் உல் ஹக் மனம் திறந்து பேசினார்.