Fruits to avoid for Weight Loss: பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து ஆகியவை அதிகமாக இருப்பதால் இவை செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கின்றன. இதனால் வளர்சிதை மாற்றம் நன்றாக இருப்பதோடு கொழுப்பை இது எரிக்கிறது.
ஆனால் கோடையில் கிடைக்கும் சில பழங்களை உட்கொள்வதால் உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும். ஏனெனில் இவற்றில் சர்க்கரை, கலோரிகள் மற்றும் கொழுப்புகளின் அளவு அதிகமாக இருக்கின்றன. உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் இந்த பழங்களை தவிர்க்க வேண்டும்.
100 கிராம் திராட்சைப்பழத்தில் சுமார் 16 கிராம் சர்க்கரை மற்றும் 70 கலோரிகள் உள்ளன. ஆகையால் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், குறைந்த அளவில் திராட்சை சாப்பிடுங்கள்.
உடல் எடையை குறைக்க விரும்பினால், அன்னாசிப்பழத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரை உள்ளது. இது உங்கள் எடையை அதிகரிக்கும். ஆகையால் அதை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.
மாம்பழத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கலோரி அளவு மிக அதிகம். 100 கிராமில் 80 முதல் 100 கலோரிகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அதிக மாம்பழங்களை உட்கொண்டால், உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும்.
சப்போட்டா பழத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இதனுடன் கலோரிகளின் அளவும் அதிகமாக உள்ளது. ஆகையால் இதை உட்கொள்வது உங்கள் எடையை அதிகரிக்கலாம்.
வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் சர்க்கரை மற்றும் கலோரிகளுடன் அதிக கொழுப்பு உள்ளது. 100 கிராம் வாழைப்பழத்தில் சுமார் 116 கலோரிகள் காணப்படுகின்றன. இதை சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும்.