ஐபோனிற்கும் மற்றும் இதர ஆப்பிள் சாதனங்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவென்று இதுவரை யோசித்ததுண்டா? பெரும்பாலான ஆப்பிள் தயாரிப்பு பொருட்களில் முதலில் 'i’ சேர்க்கப்படுகிறது எதற்காக என்று இங்குத் தெரிந்துகொள்வோம்.
ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு விதவிதமான பெயர்கள் வைக்கின்றன. அந்தவகையில் குறிப்பிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மட்டும் எதற்காக முதலில் "i” என்று பெயர் வைக்கின்றனர் தெரியுமா? இதுபற்றி உங்களுக்குக் கேள்வி எழுந்திருக்கிறதா. நாம் பயன்படுத்தும் பொருட்களின் விவரங்களை அறிந்துகொள்வது அவசியமான ஒன்று.
ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பெரும்பாலான பொருட்களின் பெயருடன் 'i'உடன் தொடங்குகிறது. இந்த எழுத்து எதற்காகச் சேர்க்கப்படுகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.
iphone, ipad, ipod ஆகியவற்றில் “i” முதலில் வருவது எதற்காக என்று எப்போதாவது யோசித்திருக்கீர்களா?
பிரபலமான ஆப்பிள் நிறுவனம் அதன் சின்னமான ஆப்பிளை அனைத்து சாதனங்களிலும் குறியிட்டிருக்கும். அதுபோன்று இந்த i எழுத்தும் மிகவும் பிரசதிப்பெற்ற பெயராகும்.
“i” எழுத்தைக் கொண்டிருக்கும் அனைத்து சாதனங்களும் மிகப்பெரிய செல்வாக்குமிக்க சிறப்புத் தொழில்நுட்பம் நிறைந்த சாதனங்களாகும்.
1998யில் முதன் முதலில் “i” எனும் வார்த்தை imac உடன் தொடங்கியது. இந்த வெளியீட்டின் போது அதன் தலைமை நிர்வாகியான ஸ்டீவ் ஜாப்ஸ் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் “i” எழுத்திற்கு விளக்கும் கூறுகையில், “i” என்பது ஒரு சீரற்ற எழுத்து அல்ல என்று கூறினார்.
“i” எழுத்து மிக முக்கிய ஐந்து கருத்துக்களைத் தனித்துவமாகப் பிரதிபலிக்கிறது. இணையம், தனிநபர், அறிவுறுத்தல், தகவல் மற்றும் ஊக்கம் உள்ளிட்ட அனைத்தும் இந்த எழுத்து சிறப்பாக பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
“i” என்ற தனிப்பட்ட பிரதிப்பெயர் மற்றும் கல்வியியல் அறிவுறுத்தல் ஆகியவற்றுடன் ஒரு தொடர்பை இணைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.