டி20 வரலாற்றில் குறைந்த பந்தில் சதம் அடித்தது யார் தெரியுமா?

Fastest hundreds in T20Is: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

1 /6

சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை எஸ்டோனியாவை  (Estonia ) சேர்ந்த சாஹில் சவுகான் படைத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 17ம் நடைபெற்ற சைப்ரஸுக்கு (Cyprus) எதிரான போட்டியில் 27 பந்துகளில் சதம் அடித்தார்.

2 /6

அடுத்ததாக ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா உள்ளார். காம்பியாவுக்கு எதிராக  33 பந்துகளில் சதம் அடித்துள்ளார். மொத்தமாக அந்த போட்டியில் 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் அடித்துள்ளார்.

3 /6

சிக்கந்தர் ராசாவின் சாதனைக்கு முன்பு, அதிவேக சதம் என்ற சாதனையை நமீபியாவின் ஜான் நிகோல் லோஃப்டி ஈட்டன் வைத்து இருந்தார். நேபாளத்திற்கு எதிராக 33 பந்துகளில் சதம் அடித்து இருந்தார்.

4 /6

சர்வதேச டி20 போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்த சாதனையை டேவிட் மில்லர், ரோஹித் ஷர்மா மற்றும் எஸ் விக்ரமசேகரா ஆகியோர் வைத்துள்ளனர்.

5 /6

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் 40 பந்துகளிலும், திலக் வர்மா 41 பந்துகளிலும் சதம் அடித்துள்ளனர். சர்வதேச டி20 போட்டிகளில் முதல் சதம் அடித்தவர் கிறிஸ் கெய்ல் தான்.

6 /6

இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இது அவரது 2வது சர்வதேச சதம் ஆகும்.