எல்லோரும் சாதாரணமாக இருக்கும் போது உங்களுக்கு மட்டும் அதிகம் குளிர்கிறதா? இதற்கு சில உடல் சார்ந்த காரணங்கள் இருக்கலாம். என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
உடலில் இரும்புச்சத்து போதுமான அளவு இல்லை என்றால் இரத்த சோகை ஏற்படும். இந்த சமயத்தில் வெளியில் அதிக குளிர் இல்லை என்றாலும் உங்கள் உடல் சூடாக இருக்க போராடும்.
கீரை, பருப்பு மற்றும் சிவப்பு இறைச்சி போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இவை உங்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது.
உங்கள் இரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் கைகள் மற்றும் கால்களுக்கு இரத்தம் சென்றடைவதில்லை. இதனால் நீங்கள் மற்றவர்களை விட குளிர்ச்சியாக உணரலாம். ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்திருந்தாலும் இரத்த ஓட்டம் குறைந்து உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும்.
உங்கள் உடலில் போதுமான கொழுப்பு அமிலங்கள் இல்லாத போது உங்கள் உடல் வெப்பத்தை விரைவாக இழக்கிறது, இதனால் உடல் சூடாக இருப்பது கடினம். எடை குறைவாக இருப்பவர்கள் அல்லது மிக குறைவாக சாப்பிடுபவர்கள் குளிர்ச்சியாக உணரலாம்.
ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் கொண்ட சமச்சீர் உணவை உண்பது உங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் சூடாக இருக்க மிகவும் முக்கியம்.
நீங்கள் போதுமான தூக்கம் பெறவில்லை என்றால், உங்கள் உடலின் வெப்பத்தை வைத்திருக்கும் திறன் குறையும். உங்கள் உடல் சூடாக இருக்க தினசரி குறைந்தது 7-9 மணிநேரம் தூக்கத்தை பெற முயற்சி செய்யுங்கள்.