Which State In India Has The Highest Literacy Rate 2024 : இந்தியாவில், மொத்தம் 28 மாநிலங்கள் இருந்தாலும், அதில் சில மாநிலங்கள் மட்டுமே அதிக படிப்பறிவு கொண்ட மாநிலமாக இருக்கிறது. அவை எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?
Which State In India Has The Highest Literacy Rate 2024 : சகோதரத்துவம், வேற்றுமையிலும் ஒற்றுமை என பல்வேறு நற்பண்புகள் நிறைந்த நாடாக விளங்குகிறது இந்தியா. நம் நாட்டில், மக்கள் தொகை 145 கோடிக்கும் மேல் இருந்தாலும், அதில் சில கோடி பேருக்கு மட்டுமே 3 வேலை உணவு, தங்குவதற்கு வீடு, அத்தியாவசிய தேவைகள், படிப்பு உள்ளிட்டவை கிடைக்கிறது. மொத்தம் இருக்கும் 28 மாநிலங்களில் ஒரு சில மாநிலங்களில் இருக்கும் மக்கள் மட்டுமே எழுத்தறிவு மற்றும் படிப்பறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட மக்களை கொண்ட டாப் 8 மாநிலங்களை இங்கு பார்க்கலாம்.
கோவா: கோவாவில் 88.7% பேர் படித்தவர்களாக இருக்கிறார்களாம். இங்கு மக்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுமார் 87.6% பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் வருடா வருடம் கொண்டு வரப்பட்டு வருகின்றன.
பஞ்சாப்: பஞ்சாப்பில் 76.1% பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு, பள்ளி படிப்பிற்கு பிறகு மேற்படிப்புகளை மேம்படுத்துவதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகின்றன.
ஹிமாச்சல பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசத்தில், 83.8 சதவீதம் பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு, படிப்பதற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் 82.3% பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு: தமிழகத்தில், 80.1% பேர் படித்தவர்களாக இருக்கின்றனர். இங்கு, பள்ளி, கல்லூரி படிப்பை தாண்டி டிப்ளமோ மற்றும் இதர திறன் படிப்புகளும் அதிகமாக மக்களால் படிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
டெல்லி: டெல்லியில், பட்டப்படிப்பு படித்தவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். இங்கு 86.2% பேர் படித்தவர்களாக இருக்கின்றனராம்.
கேரளா: இந்தியாவிலேயே அதிகம் படிப்பறிவு கொண்டவர்கள் இருக்கும் மாநிலமாக இருக்கிறது கேரளா இங்கு இருப்பவர்களுள், 96.2% படிப்பறிவு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.