Japanese water therapy benefits: தண்ணீர் அருந்துவது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்பது தெரிந்தாலும், எப்போது குடித்தால் அதிக நன்மை என்பது தெரியுமா? சொல்லிக் கொடுக்கும் ஜப்பானிய நீர் பருகும் சிகிச்சை முறை
ஜப்பானிய நீர் சிகிச்சை என்ற நீர் பருகும் முறையானது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தோலின் நிறத்தை பளபளப்பாக்குகிறது. இது வெளிப்புற தோற்றத்திற்கு என்றால், உடலின் உட்புறமாக குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதுடன் மலச்சிக்கலை தடுக்கிறது
நமது உடலில் 75% திரவமே இருப்பதால், நாம் பருகும் திரவங்கள் குறிப்பாக நீர் நமது சருமத்தை பாதிக்கிறது. நமது சருமத்திற்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், சருமம் பொலிவிழந்து வறண்டு போய்விடுகிறது. வயதாகும் தோற்றமும் விரைவில் வந்துவிடுகிறது
ஜப்பானிய நீர் சிகிச்சை என்பது காலையில் எழுந்ததும் அறை வெப்பநிலையில் இருக்கும் நீரை குடிக்கும் ஒரு நடைமுறையாகும். தூங்கி எழுந்த பிறகு ஒரு கிளாஸ், பல் துலக்குவதற்கு முன்பு, காலை உணவுக்கு 45 நிமிடங்களுக்கு முன்பு என எந்த உணவும் உண்பதற்கு முன்னதாக நான்கு முதல் ஐந்து கிளாஸ் அறை தண்ணீரை அருந்த வேண்டும்
ஜப்பானிய நீர் சிகிச்சை முறையானது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தலாம் மற்றும் எடை இழப்புக்கு உதவலாம், ஏனெனில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நச்சுகளை அகற்றுவதன் மூலம் உடலின் இயற்கையான நச்சுத்தன்மை செயல்முறையை ஊக்குவிக்கிறது. இது கொழுப்பை கரைத்து, தொப்பை கொழுப்பை எரிக்க உதவுகிறது.
வகை 2 நீரிழிவு, புற்றுநோய், மலச்சிக்கல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என பல நோய்களுக்கு ஜப்பானிய நீர் சிகிச்சை நல்ல பலனளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பான எந்த ஆராய்சிகளும் உறுதியான முடிவை கூறவில்லை
போதுமான நீரேற்றத்தை பராமரிப்பதன் நன்மைகளைக் கொடுக்கும் ஜப்பானிய நீர் பருகும் முறையானது, மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதுடன், நல்ல ஆற்றலுடன் செயல்பட வைக்கும். இரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும்.
நீர் உட்கொள்ளலை அதிகரிப்பது சிறுநீரக கற்கள், ஒற்றைத் தலைவலி மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றைத் தவிர்க்க உதவும். அதிலும் குறிப்பாக வெளியில் வேலை செய்பவர்கள் மற்றும் அதிக அழுத்தம் உள்ள வேலைகளில் ஈடுபடுபவர்கள் அதிகமாக நீர் குடிக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.