புதுச்சேரி மாநிலத்தில் 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது.
இன்று காலை 9.45 மணிக்கு பேரவை கூடியதும், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து உரையாற்றினார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு ரத்து தீர்ப்பை எதிர்த்த வழக்கு: இன்று விசாரணை
தொடர்ந்து நாளை முதல் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. வருகிற 30 ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு இளைஞர் நலன் துறை பிரிவு தனி துறையாக துவங்கபடும்.
- புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலை கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவங்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.
- மின் துறைக்கு 1,596 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடும். இந்துறைக்கு ரூபாய் 31.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சேரி கடற்பகுதியில் மிதக்கும் படகு துறை அமைக்கப்படும்.
- காரைக்காலில் அரசு மருத்துமனை துவங்கப்படும்.
- புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
- அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 2 கோடி வழங்கப்படும்.
மேலும் படிக்க | தஞ்சாவூர் அருகே ‘இன்னும்’ ஆற்றில் இறங்கி பிணத்தை எடுத்துச்செல்லும் அவல நிலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ