தேசிய கீதத்தில் இடம்பெற்றுள்ள "சிந்த்" என்ற வார்த்தைக்கு பதிலாக வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் MP போரா தனி நபர் தீர்மானம் கொண்டுவந்துள்ளார்!
வடகிழக்கு பகுதியானது, இந்தியாவின் முக்கியமான பகுதியாகும் ஆனால் அப்பகுதி குறித்து தேசிய கீதத்தில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. மேலும் சுதந்திர இந்தியாவிற்கு முன்னர் நாட்டில் இடம்பெற்றிருந்த "சிந்த்" பகுதி தற்போது பாக்கிஸ்தானில் இணைந்திருப்பதால் அந்த வார்த்தையினை நீக்கி அதற்கு பதிலாக வடகிழக்கு பகுதியை குறிக்கும் வகையில் "உத்தர்புர்வ்" என்ற வார்த்தையினை திருத்தி அமைக்க வேண்டும் என இந்த தீர்மானத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950-ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள், இந்திய நாட்டின் அப்போதை குடியரசு தலைவர் திரு ராஜேந்திர பிரசாத் அவர்களால் தேசியகீத பாடலானது தேசியகீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது பிற்காலத்தில் தேசிய கீதத்தில் மாற்றம் தேவைப்படும் பட்சத்தில் அதனை மாற்றிக்கொள்ளலாம் என தனது தீர்மானத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த தீர்மானத்தினைப் பயன்படுத்தி தற்போது தேசிய கீதத்தில் மாற்றம் செய்துகொள்ளலாம் என இந்த தீர்மானம் நிரைவேற்றப்பட்டுள்ளது.
#Congress MP moves resolution in #RajyaSabha, demands '#Sindh' be replaced with 'NE' in #NationalAnthem
Read @ANI Story | https://t.co/plBG8CrGAs pic.twitter.com/DRw2CxLuS3
— ANI Digital (@ani_digital) March 16, 2018
முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு சிவசேனா உறுப்பினர் திரு அரவிந்த சவன்த் அவர்கள் இதே கோரிக்கையினை லோக் சபாவில் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அவர் சிந்த் என்ற வார்த்தைக்கு பதிலாக எந்த வார்த்தையினை பயன்படுத்தலாம் என்ற தெரிவிக்கையில் என்பது குறிப்பிடத்தகது!