Tesla EV Car Sales Soon In India: அமெரிக்காவின் மிகப்பெரிய கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் இந்தியாவில் அதன் விற்பனையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கொடிக்கட்டி பறக்கும் டெஸ்லா, இப்போது இந்தியாவுக்கும் காலடி எடுத்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tesla In India: பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்புக்கு பின்...
சமீபத்தில், டெஸ்லா நிறுவனம் மும்பை புறநகரில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை அறிவித்துள்ளன. பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்கை சந்தித்த பிற்பாடு இந்த வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதன்மூலம், இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு வர உள்ளது உறுதியாகிறது எனலாம்.
Tesla In India: ஏப்ரல் முதல் விற்பனை...
வரும் ஏப்ரல் மாதம் முதல் டெஸ்லா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, டெல்லியின் ஏரோ சிட்டி பகுதியிலும், மும்பையின் பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியிலும் இரண்டு ஷோரூம்களுக்கான இடங்களை அந்நிறுவனம் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Tesla In India: இந்தியாவில் டெஸ்லாவின் உற்பத்தி ஆலை எங்கு அமையும்?
ஆரம்பக் கட்டத்தில் டெஸ்லா நிறுவனம் அதன் ஜெர்மனி உற்பத்தி ஆலையில் இருந்து எலெக்ட்ரிக் கார்களை, இந்தியாவில் இறக்குமதி செய்து அதன் விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு விரைவில் இந்தியாவில் உற்பத்தி ஆலையை தொடங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் அதன் உற்பத்தி ஆலையை குஜராத்தில் அமைக்கும் என பல்வேறு தகவல்கள் முன்னர் வெளியாகின.
இருப்பினும், தற்போது தென்னிந்தியாவில்தான் டெஸ்லாவின் உற்பத்தி ஆலை அமையும் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு டெஸ்லா வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முன்னர் கூறப்பட்டாலும், தற்போது ஆந்திரா மாநிலத்திற்கே அதிக வாய்ப்பிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Tesla In India: எலெக்ட்ரிக் கார்களுக்கு குறையும் இறக்குமதி வரி
இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு வந்தால் அவற்றின் விலை எவ்வளவு இருக்கும் என்பதே பலரும் கேட்கும் கேள்வியாக உள்ளது. அந்த வகையில், எலெக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்வதற்கு 110% வரி விதிக்கப்படும் நிலையில், அதனை 15% ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது டெஸ்லாவின் கார்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
Tesla In India: இந்தியாவில் டெஸ்லா கார்களின் விலை எவ்வளவு வரும்?
அதன்படி, டெஸ்லாவின் தயாரிப்பிலேயே சற்று விலை குறைவான EV கார் மாடல் என்றால் அது Model 3 கார்தான். இதன் விலை ஆரம்ப கட்டமாக ரூ.30.4 லட்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதன்பின்னர், இறக்குமதி வரி, சாலை வரி, காப்பீடு உள்ளிட்ட மற்ற கட்டணங்கள் அனைத்தையும் சேர்த்தால் டெஸ்லாவின் Model 3 கார் ரூ.35-40 லட்சம் வரை வரலாம் என கூறப்படுகிறது.
Tesla In India: இந்தியாவில் மற்ற ev தயாரிப்புகளுக்கு பாதிப்பா?
தற்போது இந்தியாவில் முன்னணியில் இருக்கும் EV கார்களான மஹிந்திரா XEV 9e, மாருதி சுசுகி e-Vitara, ஹூண்டாய் e-Creta ஆகியவற்றை விட இந்த டெஸ்லா Model 3 கார் 20% - 30% விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், டெஸ்லாவின் இந்திய வருகை மற்ற EV தயாரிப்புகளை எதுவும் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது. ஏனென்றால் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 கார்களில் பெரும்பாலானவை ரூ.20 லட்சத்திற்கு குறைவான விலை கொண்டவை எனலாம்.
மேலும் படிக்க | "இவர் இல்லனா Tesla இல்ல" எலான் மஸ்க் பாராட்டிய தமிழர் யார் இவர்?
மேலும் படிக்க | EV வாகனங்களை அதிகம் விரும்பும் இளைஞர்கள்! ஏன் தெரியுமா?
மேலும் படிக்க | 401 கிமீ ரேஞ்சில் அறிமுகமான பக்கா ஸ்டைலிஸ்ஷான மின்சார கார் - விலை எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ