காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாகவும், அவதூராக பேசியதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர்அலிகான் சிறையில் அடைக்கப்பட்ட காரணம் குறித்து தெரிந்துக்கொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நடிகர் சிலம்பரசன் இன்று சென்று விளக்கம் கேட்டுள்ளார்.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிலம்பரசன் அவர்கள் தெரிவிக்கையில்...
"நல்ல எண்ணத்திற்காக மன்சூர் அலிகான் போராட வந்தார், தமிழன் என்ற உணர்வோடு போராடியவர் அவர். யார் மீது தவறு என்று கேட்பதற்காக இங்கு வரவில்லை. நமக்காக தன்னையும் கைது செய்யுங்கள் என்று முன் வந்து போராடியவர் அவர்.
சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் இருக்கும் அவரின் நிலை குறித்து அறிய வந்தேன். பின்னர் மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் சிலம்பரசன் கேட்டுக்கொண்டார்.
மன்சூர் அலிகான் தவறாக பேசி இருந்தால் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் பேசியது தவறு என்றால் போராட்டத்தில் பங்கேற்றவர் அனைவரும் செய்தது தவறு தான்". எனவும் அவர் குறிப்பிட்டார்