பிரபலமான சினிமா குடும்பத்தின் வாரிசான ஆராத்யா பச்சன் அற்புதமாக ஹிந்தியில் பேசும் வீடியோ வைரலானது அந்த வீடியோவில் ஆராத்யாவின் அப்பா அபிஷேக் பச்சன் பதிலளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் வீடியோவைப் பகிர்ந்த சமூக ஊடகப் பயனர் ஒருவர் ஆராத்யா பச்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்து, "மரபு தொடர்கிறது" என்று கூறினார்.
The Legacy continues... @SrBachchan @juniorbachchan https://t.co/khLvpcAisY
— Miten Lapsiya, the artist (@mitenlapsiya) March 13, 2022
நெட்டிசன் கூறியதை அபிஷேக் கவனித்தார். மரியாதையின் அடையாளமாக, அபிஷேக் கைகளைக் குவித்து எமோஜியுடன் பதிலளித்தார். தாத்தா அமிதாப் பச்சனின் ஹிந்தி மொழிப் புலமைக்கு வாரிசாக வந்துள்ளார் ஆராத்யா என்று பலரும் பாராட்டுகின்றனர்.
அமிதாப் பச்சன் உயர்ந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளரும் கூட.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதை நிரூபிக்கும் வகையில் ஐஸ்வர்யா-அபிஷேக் பச்சனின் மகளின் பேச்சு இருக்கிறது.
அனைவரையும் பேச்சாலும், குரலாலும் கட்டிப்போடும் அமிதாப் பச்சனின் பேத்தி ஆராத்யா தனது பேச்சு திறமையால் அனைவரின் இதயங்களையும் வென்றார். அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனின் குழந்தை இந்தியில் சில சொற்றொடர்களை பேசும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் படிக்க | ராகவா லாரன்ஸை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
பள்ளி சீருடையில் இருக்கும் சிறுமி ஆராத்யா, இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து வீடியோவில் பேசியுள்ளார். ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் அதை கவிதை மூலம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
வீடியோவைப் பகிர்ந்துள்ள சமூக ஊடகப் பயனர் ஒருவர் ஆராத்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து, "மரபு தொடர்கிறது" என்றார்.
தனது மகள் பெறும் ஊடக கவனத்தைப் பற்றி முன்பு ஒருமுறை பேசிய ஐஸ்வர்யா பச்சன், “ஆராத்யா சிறுவயதில் இருந்தே ஊடகங்களின் கவனத்தை பெற்றிருக்கிறாள். நான், எனது இருபதுகளில்தான் நான் அதை பார்த்தேன். அவளால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா என்று எனக்கு தெரியாது” என்று கூறியிருந்தார்.
மேலும் படிக்க | ஐஸ்வர்யாவும் ஆராத்யாவவும்
பிரபலலமான குடும்பத்தை சேர்ந்த ஆராத்யாவின் கொள்ளுத் தாத்தா, அதாவது நடிகர் அமிதாப்பச்சனின் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் ஒரு கவிஞர், இலக்கியவாதி.
ஹிந்தி இலக்கிய உலகில் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மிகப் பிரபலமானவர்.
ஹிந்தி மொழிக் கவியரங்கங்களில் அவரது பாடல்கள் மிகப் பரிச்சயமானவை. மதுஷாலா, தேரா ஹார், சத்ரங்கி உட்பட அவரது கவிதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை.
எனவே, ஆராத்யாவுக்கு மொழியறிவும், மொழியின் மீதான பற்றும் இயல்பாகவே வந்திருப்பது இயல்பானதே....
கொள்ளுத் தாத்தா ஹரிவன்ஷ் ராய் பச்சனின் வழி வந்த ஆராத்யா, தாத்தாவின் வழியின் இலக்கியத்தில் ஆர்வத்துடன் இருப்பாரா என்ற எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகிறது.
மேலும் படிக்க | கமல் படத்தில் ரஜினி பட கனெக்ஷன்! - தீயாய் பரவும் அப்டேட்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR