கோவை மாநகரில் யானை ஒன்று உணவு தேடி இரவு நேரத்தில் வலம் வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது!
சமீப காலமாக கோவை மாநகரில் யானைகள் ஜாலியாக வளம் வருவது வழக்கமாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது கோவையின் தடகம் பகுதியில் ஒரு யானை உணவு தேடி குடியிறுப்பு பகுதியில் நுழைந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சில மாதங்களுக்கு முன்னதாக கோயம்புத்தூரின் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பெண் யானை ஒன்று தன்னுடைய குட்டியுடன் உணவு தேடி யாரும் குடியிறுப்பு பகுதிக்குள் நுழைந்தது.
#WATCH: An elephant entered a house in Coimbatore's Thadagam, in search of food, this morning and ate rice & fertilisers kept in bags. The elephant later left from the spot after multiple attempts by the villagers to make it go away. #TamilNadu pic.twitter.com/rcLOAz7iFB
— ANI (@ANI) October 21, 2018
வீட்டின் உள்ளே சென்று பார்த்த அந்த இரண்டு யானைகளும் உணவு இல்லை என்று தெரிந்தவுடன் சேதம் ஏதும் ஏற்படுத்தாமல் அமைதியா திரும்பி சென்றுவிட்டது. எனினும், இந்நிகழ்ச்சி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கோவையின் தடகம் பகுதியில் யானை ஒன்று உணவு தேடி வீட்டிற்குள் நுழைந்துள்ளது. பின்னர் வீட்டடில் இருந்த அரிசி மூட்டையினை காலி செய்த யானை அப்பகுதி மக்களின் பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டது!