பெரும்பாலும் குழந்தைகளின் குறும்பு என்றாலே பார்ப்பதற்கு வேடிக்கையாகத் தான் இருக்கும். அதிலும் சில குழந்தைகள் தங்கள் பெற்றோரை தங்கள் பொல்லாத செயல்களாலும் சுட்டித்தனம் செய்வதை காணலாம். அதன்படி ஷாப்பிங் மால்கள், கண்காட்சிகள் மற்றும் பிற இடங்களில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து தங்களுக்கு பிடித்த பொம்மையை வாங்கித் தரும் படி அடம்பிடிப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் இது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் ஹாங்காங்கில் நடந்த ஒரு சம்பவத்தால், தந்தையின் பாக்கெட்டை பாதித்துள்ளது. ஆம்., ஹாங்காங்கின் மோங்காக் மாவட்டத்தில் உள்ள லாங்ஹாம் பிளேஸ் ஷாப்பிங் மாலில், ஒரு சிறிய குழந்தை அங்கிருந்த பெரிய கனமான பொம்மையை தள்ளிவிட்டு உடைந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில் ஹாங்காங் நாட்டை சேர்ந்த ஒருவர் தனது மகனின் இந்த தவறால் பெரிய இழப்புக்கு ஆளாகியுள்ளார்.
மேலும் படிக்க | மணமகனுக்கு வந்த சோதனை, மேடையில் அவிழ்ந்துவிழுந்த பேண்ட்: வைரல் வீடியோ
அந்த ஷாப்பிங் மாலில் உள்ள பொம்மைக் கடையிலிருந்து செங் என்ற நபர் ஒரு அழைப்பில் கலந்து கொள்ள வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அவர் தனது மகனிடம் சென்றார், அங்கு உடைந்த டெலிடூபியின் தங்க சிலைக்கு அருகில் அவர் நிற்பதைக் கண்டார். இதற்குப் பிறகு, கடை உரிமையாளரும் ஊழியர்களும் செங்கிற்கு இழப்பீடு வழங்குமாறு அழுத்தம் கொடுத்தபோது, அவர் $ 33,600 (சுமார் ரூ. 3,29,926) செலுத்த வேண்டியிருந்தது.
இந்த சம்பவம் தற்போது இணையத்தில் மெகுவாக வைரலாகி வருகின்றது. இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்த காணொளி வெளியான பின்புதான் அந்தச் சிறுவன் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக ஒதுங்கியதும் அப்போது பின்னால் இருந்த அந்தப் பொம்மை கீழே விழுந்து நொறுங்கியதும் தெரியவந்தது. அந்தக் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது. இணையவாசிகளின் குறைகூறல்களுக்கு உள்ளான அந்தக் கடை மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக எஸ்சிஎம்பி செய்தி நிறுவனம் கூறியது. மேலும் சிறுவனின் பெற்றோரிடம் வசூலிக்கப்பட்ட பணத்தையும் அந்த கடையின் உறிமையாளை திருப்பிக் கொடுத்ததார். அத்துடன் இந்த வீடியோவைப் பார்த்த இணையதளவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | கிரிக்கெட் பேட்டால் கணவனை வெளுத்து வாங்கிய மனைவி; அதிர்ச்சி தரும் CCTV காட்சிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR