பிரபல பாலிவுட் படத்தில் ஆன் டாரோ என்ற பெண்ணை காதலித்து இறுதியில் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தனது உயிரை இழக்கும் பிரமாண்டமான குரங்கு கிங் காங்கின் சோகக் கதையை நம்மில் பெரும்பாலோர் நன்கு அறிந்திருக்க கூடும். ஒரு விலங்கு ஒரு பெண்ணை காதலிக்கும் இந்த கதை பல படங்களில் காட்டப்பட்டுள்ளது. இந்தக் கதை கற்பனையானதாக இருந்தாலும், இரு வெவ்வேறு இனங்களான மனிதர்கள் விலங்குகளுக்கிடையேயான காதல் என்பது இன்னும் நம் மனதைக் குழப்பும் விஷயமாகவே உள்ளது. இந்த மனிதன் - விலங்கு காதல் தொடர்பான சம்பவம் தொடர்பாக நிஜ வாழ்க்கைக் கதை ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் இன்றும் மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. இது ஒரு பெண்ணுக்கும் டால்பினுக்கும் இடையிலான காதல் உறவின் கதை. ஆனால், இந்த கதை விலங்கின் துயர மரணத்துடன் முடிந்தது.
மார்கரெட் ஹோவ் லோவாட் என்ற பெண் மற்ற குழந்தைகளைப் போலவே சிறுவயதில் விலங்குகள் கூட பேசும் கதைகள் பலவற்றை கேட்டு வளர்ந்தார். ஆனால் பெரும்பாலான குழந்தைகளைப் போலல்லாமல், லோவாட் தனது குழந்தைப் பருவத்தை கடந்த பிறகும் கூட இந்தக் கதைகளில் இருந்து வெளிவரவில்லை. அவள் 20 களின் முற்பகுதியில் இருந்தபோது, கரீபியன் தீவான செயின்ட் தாமஸில் வசிக்கும் போது அதற்கான அனுபவம் ஏற்படும் வாய்ப்பு கிடைத்தது. 1963 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையில் டால்பின்களுடன் அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த ஒரு ரகசிய ஆய்வகத்தை அவரது மைத்துனர் குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆய்வகத்திற்குச் செல்ல அவர் முடிவு செய்தார்.
அங்கு, மார்கரெட் ஹோவ் லோவாட், ஜான் சி. லில்லி என்ற நரம்பியல் விஞ்ஞானியை சந்தித்தார். அவர் நாசாவின் நிதியுதவியுடன் ஆய்வு ஒன்றை நடத்தி வந்தார். பீட்டர் என்ற டால்பினுக்கு மனிதப் பேச்சைப் புரிந்துகொள்வதற்கும் அதைப் பின்பற்றுவதற்கும் கற்றுக்கொடுக்கும் ஆராய்ச்சித் திட்டத்தின் பனிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆய்வின் நோக்கம் மனிதர்கள் டால்பின்களுடன் எப்படி பேச முடியும் என்பதைக் கண்டறிவது ஆகும். மார்கரெட் மற்றும் பீட்டர் பத்து வாரங்கள் ஒன்றாக ஒரு பெரிய நீர் வளாகத்தில் வாழ்ந்தனர்.
பீட்டர் கற்றுக் கொள்ள விரும்பும் வார்த்தைகளை உச்சரிப்பதில் அதற்கு உதவ, அவள் மெதுவாகப் பேசவும், குரலின் தொனியை மாற்றியும் பேசி அதனை பழக்கினாள். பருவ வயதுடைய டால்பினாக இருந்ததால், பீட்டர். மார்கரெட் ஹோவ் லோவாட் மீது தன்னை உரசிக் கொண்டு தனது காதல் உந்துதலைத் வெளிப்படுத்துவதை தொடர்ந்து உணர்ந்தார். அது அவரது பாலியல் தூண்டுதலாக நம்பப்பட்டது. டால்பின் பீட்டரை இரண்டு பெண் டால்பின்களுடன் கீழே உள்ள குளத்திற்கு அழைத்துச் செல்வது லோவாட் கடினமாக இருந்தது. ஏனெனில் அதன் பாலியல் தூண்டுதல்கள் அவரது ஆராய்ச்சிக்கும் இடைஞ்சலாக இருந்தது . லோவாட் இறுதியில் டால்பின் பீட்டர் பாலியல் இச்சைகளை தீர்த்துக் கொள்ள அந்த பெண் அனுமதித்துள்ளார்.
பின்னர் அவர் அளித்த நேர்காணல்களில், இது தனது பக்கத்திலிருந்து பாலியல் உணர்வு ஏதும் அல்ல, ஆனால் கற்றல் செயல்முறையை எளிதாக்க டால்பினுடனான தனது பிணைப்பை வலுப்படுத்த விரும்புவதாகக் கூறினார். இந்த விசித்திரமான உறவைப் பற்றி மக்கள் பேசத் தொடங்கினர். ஹஸ்ட்லர் இதழில், "Interspecies Sex: Humans and Dolphins" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இதை விரிவாகக் குறிப்பிட்டது. இது ஆராய்ச்சியில் மிக மோசமாகப் பிரதிபலித்தது. இறுதியில் நாசா இதற்கான ஆராய்ச்சி மற்றும் திட்டத்திற்கான நிதியுதவி இறுதியில் நிறுத்தியது.
ஆய்வுக்கு பிறகு பீட்டர் மியாமியில் உள்ள வேறு தொட்டி வசதிக்கு மாற்றப்பட்டார், அங்கு அதன் உடல்நிலை மோசமடைந்தது. அது விரைவில் நீரில் மூழ்கி சில மாதங்களில் இறந்தது. மார்கரெட் சென்றதும் பிரிவால் மனமுடைந்த பீட்டர், சுவாசிக்க மறுத்து, தனது தொட்டியின் அடிப்பகுதியில் மூழ்கி இறந்துவிட்டது. அந்த சம்பவம், இன்றும் டால்பின் 'தற்கொலை' செய்து கொண்ட நிகழ்வாகவே கருதப்படுகிறது.
மேலும் படிக்க | ரசாயன பயன்பாடு பெண்களுக்கு மட்டுமே ஏன் கேன்சரை அதிகரிக்கிறது? அதிர்ச்சி தரும் ஆய்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ