Fengal Cyclone Chennai Rains Viral Video : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழை வெளுத்து வாங்கி வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக உருமாறி தற்போது தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயலுக்கு முன்பு, எப்போதும் பேய் மழை வருவது இயல்பு. அந்த வகையில், தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடைமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், மழை வெள்ளம் மற்றும் புயலை எதிர்கொள்ள, அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்த மழை வெள்ளத்திலும், ஒருவர் செய்த மனிதாபிமான செயல் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ!
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்ததை தொடர்ந்து, இன்று காலை முதல் விடாமல் அடை மழை பெய்து வந்தது. இதனால், சென்னையின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர், வெள்ளம் போல காட்சியளிக்க தொடங்கின. பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலை, தாம்பரம், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் ஆறாக பெருக்கெடுத்தி ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் சிறமத்திற்கு ஆளாகினர். ஆனால், இந்த அடைமழையிலும் மனிதாபிமானத்துடன் செயல்படுபவர்களை பாராட்ட, மக்கள் தவறுவதில்லை. அப்படிப்பட்ட வீடியோ ஒன்றுதான் தற்போது நெட்டிசன்களில் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.
Whenever a cyclone or heavy rain , hits #Chennai, humanity shines through. Here's a bus driver helping an auto stuck in the flood. Chennai always shows us how to come together during tough times!#ChennaiRains #CycloneFengal
pic.twitter.com/9ZqXxjM1gg— JD wikki (@jdwikki) November 30, 2024
சாலையில், மழை வெள்ளத்தில் சிக்கிய ஒரு ஆட்டோவை சென்னை மாநகர பேருந்து தள்ளிக்கொண்டே வருகிறது. இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளவர்கள், “அந்த ஓட்டுநருக்கு தங்கமான மனசு” என்று பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர், எப்போதெல்லாம் சென்னையை மழை வாட்டி வதைக்கிறதோ, அப்போதெல்லாம் மனிதாபிமானத்தை அள்ளி கொட்டுகிறார்கள் மக்கள் என சிலர் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
சென்னையில், தற்போது மழை நின்றுவிட்ட நிலையில், காற்று வேகமாக வீசி வருகிறது. புயல், சென்னையை கடக்கும் நேரத்தில் 80-90 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வெள்ளத்தில் மிதக்கும் சென்னை!! கடல் போல் தேங்கிய மழைநீர்..
மேலும் படிக்க | சுற்றிலும் மழை நீர்... தவிக்கும் சுனாமி குடியிருப்புவாசிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ