"இப்படியா பண்ணுவது" மாமியாரிடம் மனைவியை சிக்க வைத்த கணவன் -Viral Video

வேடிக்கையான வைரல் வீடியோ: முட்டையை வைத்து மனைவியைக் கேலி செய்த கணவன்! இதன் பிறகு நடந்தது தான் பிரமாண்டமான 'ட்விஸ்ட்'.. பார்க்க வீடியோ!

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 22, 2021, 12:28 PM IST
"இப்படியா பண்ணுவது" மாமியாரிடம் மனைவியை சிக்க வைத்த கணவன் -Viral Video title=

வேடிக்கையான வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வகையான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இவற்றில் சில மிகவும் வேடிக்கையான (Funny Viral Videos) வீடியோவாக இருக்கும். அதாவது தற்போது நாம் பார்க்கும் வீடியோவில் கணவன்-மனைவியின் உறவு அன்பாக இருக்கிறது, அதேநேரத்தில் சிரிப்பாகவும் இருக்கிறது. அப்படி ஒரு வேடிக்கையான சம்பவம் வீடியோ வைரலாகி (Funny Prank Video) வருகிறது. 

இதில் கணவன் தன் மனைவியிடம் ஜாலியாக சேட்டையை, தன் மனைவி மூலம் வீட்டில் இருக்கும் அவரது மாமியாரிடம் செய்ய வைக்கிறார். ஆனால் அதற்கு பிறகு நடப்பதை பார்த்தால், உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், சமையலறையில் மனைவி வேலை செய்து கொண்டிருப்பதை காணலாம். அப்போது கையில் ஒரு முட்டையுடன் அங்கு வரும் அவரது கணவர், தன் மனைவியை பின்னால் இருந்து கூப்பிடுகிறார். திரும்பிய உடனே கையில் இருக்கும் முட்டையை மனைவியின் தலையில் ஓங்கி அடிக்கிறார். அய்யோ என்ன பண்ணிடிங்க அட நாயே என மனைவி கோபமாக கத்துகிறார். ஆனால் ​​முட்டை உடையவில்லை. ஏனென்றால் அது வேக வைத்த முட்டை. இதை அறிந்ததும் உடனே மனைவி சிரிக்கிறார்.

ALSO READ |  ‘அவள் எனக்கே சொந்தம்’: திருமணத்தில் குட்டையை குழப்பிய மணமகளின் காதலன் ..!!

அதன் பிறகு, இதேபோன்று சேட்டையை தனது மாமியாருடன் செய்ய மனைவிக்கு கணவர் யோசனை தருகிறார். மனைவியும் சந்தோஷமாக "ஓகே" எனத் தலை ஆட்டுகிறார். ஆனால், இங்கே கணவர் ஒரு தந்திரத்தை மேற்கொள்கிறார்.

அதாவது மனைவி கையில் வேக வைத்த முட்டைக்குப் பதிலாக வேக வைக்காத பச்சை முட்டையைக் கொடுக்கிறார். அதை அறியாத மனைவி மிகவும் சந்தோஷமாக மாமியார் உட்கார்ந்து இருக்கும் ஹாலுக்குச் செல்கிறார். அங்கே மாமியார் வசதியாக உட்கார்ந்து நாளிதழை அமைதியாகப் படித்துக் கொண்டிருக்கிறார். 

அவரின் அருகில் சென்ற அவர், தனது மாமியாரின் தலையில் முட்டையை ஓங்கி அடித்தவுடன், முட்டை உடைந்து விடுகிறது. அந்த கணம் அந்தப் பெண்ணின் ரீயாக்ஷனை பார்க்க வேண்டும். நீங்களே பாருங்கள்.. வீடியோ..

 

YouTube இல் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான வீடியோ (YouTube Funny Video) மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது. இந்த வீடியோ இதுவரை 1.6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

ALSO READ |  பட்டையைக் கிளப்பும் பாட்டியின் டான்ஸ், புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

Trending News