உடற்பயிற்சிகள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம், தசைகள் மற்றும் வலுவான எலும்புகள் என அனைத்தையும் பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்தப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கும். இதனால், முதுமை உங்களை அண்டாது. உடல் பயிற்சிகளை வழக்கமாக மேற்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது மற்றும் செல்கள் சேதமடைவதை தடுப்பதோடு, அதற்கு புத்துணர்வு கொடுக்கிறது.
உடற்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு, உடல் வீக்கத்தைக் குறைக்கிறது. இது முதுமை தொடர்பான நோய்களுக்கான முக்கிய காரணியாகும். மேலும் நரம்புகளை வலுப்படுத்தி இரத்த ஓட்டம் அதிகரிப்பதன் மூலம் மூளை ஆற்றல் குறையாமல் பராமரிக்க உதவுகிறது. கூடுதலாக, சுறுசுறுப்பாக இருப்பது ஹார்மோன்களை சீராக பராமரிக்க உதவுகிறது. இந்நிலையில், ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை அடையவும், முதுமையை தவிர்க்கவும் நீங்கள் செய்யக்கூடிய பயிற்சிகளை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழவும் முதுமையை தடுக்கவும் உதவும் சில பயிற்சிகள்
1. நடைபயிற்சி
அனைவரும் எளிதில் பின்பற்றக் கூடிய எளிய பயிற்சியான நடைபயிற்சி என்பது நீண்ட ஆயுளுக்கான மிகவும் பயனுள்ள பயிற்சிகளில் ஒன்றாகும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அபாயத்தை குறைக்கிறது. நடைபயிற்சி எலும்புகளையும், தசைகளையும் பலப்படுத்துகிறது. மூட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைப்பதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது
2. நடனம்
இதய ஆரோக்கியம், மன ஒருங்கிணைப்பு மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தவும், சுறுசுறுப்பாக இருக்கவும் நடனம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய சிறந்த பயிற்சி. இது உடல் இயக்கத்தை மன ஈடுபாட்டுடன் ஒருங்கிணைக்கிறது, அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. டிமென்ஷியா அபாயத்தைக் குறைக்கிறது. நடனம் எண்டோர்பின் ஹார்மோன் வெளியீட்டைத் தூண்டுவதன் மூலம் மனநிலையை மேம்படுத்துகிறது.
3. யோகா
யோகா உடலில் நெகிழ்வுத்தன்மை, சமநிலை மற்றும் மன தெளிவை ஏற்படுத்துகிறது. இது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. மூட்டுகளை நெகிழ்வாகவும் வலுவாகவும் வைத்திருப்பதன் மூலம் இயக்கத்தை அதிகரிக்கிறது. யோகா நரம்பு மண்டலத்தையும் தூண்டுகிறது/ இது செரிமானம், தூக்கம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
மேலும் படிக்க | மூளை ஆரோக்கியம் முதல் மூட்டு வலி வரை... ஆச்சர்யங்களை கொடுக்கும் வாழைக்காய்
4. நீச்சல்
நீச்சல் என்பது முழு உடலுக்கான சிறந்த பயிற்சி. இது உடல் முழுவதற்குமான தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கிறது. இது இதயம் மற்றும் நுரையீரலை பலப்படுத்துகிறது. உடல் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. இவை அனைத்தும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு அவசியம்.
5.வலிமை பயிற்சி
பளு தூக்குதல் மற்றும் உடல் எடை பயிற்சிகளை உள்ளடக்கிய வலிமை பயிற்சி, தசைகளை வலுவூட்டவும் உடல் எடையை குறைக்கவும் உதவிகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு மெலிதல்)மற்றும் சர்கோபீனியா (தசை இழப்பு) போன்ற நிலைகளைத் தடுக்கிறது. வலிமை பயிற்சி இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. எனவே, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற தொடர்பான நோய்களின் அபாயம் குறைகிறது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்
மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ