அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்கம் அளித்த ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் இலமேத்ர-வை கௌரவிக்கும் வகையில் இன்றைய கூகிள் டூடுலினை கூகிள் வெளியிட்டுள்ளது.
பெல்ஜிய உரோமன் கத்தோலிக்க குருவாகம், வானியலாளரும் தனது சேவைகளையும் படைப்புகளையும் மக்களுக்கு வழக்கி வந்தவர் ஜார்ஜஸ் இலமேத்ர. இவரது பிறந்தநாளினை கொண்டாடும் வகையில் இன்று சிறப்பு டூடுலினை வெளியிட்டுள்ளது கூகிள்.
லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றிய இவரே முதன் முதலில் அண்டம் விரிவாக்க கோட்பாட்டை விளக்கினார். மேலும் முதன் முதலில் ஹபிள் விதியை நிறுவியவரும் இவரே. எட்வின் ஹபிள் இவ்விதியை வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இவர் 1927-ஆம் ஆண்டு இந்த விதியினை வெளியிட்டார்.
முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை கூறியவரும் இவரே.
தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர் இவர் ஜூலை 17, 1894 ஆம் ஆண்டு பிறந்தார். லுயூவென் கத்தோலிக்க பல்கலைகழகத்தில் கட்டடவியல் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர் முதல் உலக போரின் காலக்கட்டத்தில் பெல்ஜியம் ராணுவத்தில் காலத்தை கழித்தார். இயற்பியல் மற்றும் கணிதவியல் பாடத்தில் ஆர்வும் கொண்டு பயின்ற இவர் 1923-ஆம் ஆண்டு மதபோதகராக மாறினார்.
பின்னர் காம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் வானியல் துறையில் இளங்கலை பாடப்பிறிவில் இணைந்து பயின்றார். அதே வேலையில் ஹாட்வேரட் பல்கலை கழகத்திலும் தன் காலத்தை செலவிட்டு பயனுள்ளதாக மாற்றியதே பிற்காலதில் அவரை பெரும் மேதையாக மாற்றியது.
விதிகள் பல கூறிய இவரின் வாழ்க்கை ஜூன் 20,1966-ஆம் ஆண்டு முடிந்தது. எனினும் அவரது கருத்துக்களும், படைபுகளும் அவரை இன்னும் வாழவைத்துக்கொண்டு இருக்கின்றது!