Ice Cream Viral Video: இணைய உலகத்தில் பல வீடியோக்கள் தினந்தினம் வைரலாவது வாடிக்கைதான். அன்றாட நாம் பார்க்கும் சில விஷயங்களில் ஏதேனும் வினோதமான சம்பவத்தை பார்த்தால் இப்போதெல்லாம் உடனே அதை மொபைலில் வீடியோவாக எடுத்துவிடுகிறோம். பொது இடங்களில் ஏதும் பிரச்னை வந்தால் உடனே மொபைலில் வீடியோ எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றி விடுகிறோம். இப்படி பதிவேற்றம் பல லட்சக்கணக்கான வீடியோக்களில் சில ஆயிரக்கணக்கானவை தீப்போல் பரவுகின்றன.
ஊரில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை காட்டிக் கொடுப்பதில் தொடங்கி தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்பவர்களை சட்டத்தின் முன் சிக்கவைப்பது வரை இப்போது பொது ஜனங்களில் பெரிய ஆயுதமே இந்த வீடியோக்களும், இணையமும்தான். தீவிர பிரச்னை என்றில்லை பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்கள்தான் அதிகமாக இணையத்தில் டிரெண்ட் ஆகின்றன. அதுவும் இன்ஸ்டா பேஸ்புக் ரீல்ஸ், யூ-ட்யூப் ஷார்ட்ஸ் என சிறு சிறு வீடியோக்கள் பெரிய புயலையே இணையத்திலும், களத்திலும் கிளப்புகின்றன.
இன்ஸ்டாகிராம் வைரல் வீடியோ
அந்த வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் Shreyaan Daga என்ற பயனர் தனியார் நிறுவனத்தின் ஐஸ்கிரீமின் தரம் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்றில் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. தொழிலதிபர் என தனது முகப்பு பக்கத்தில் குறிப்பிட்டுள்ள Shreyaan Daga என்ற பயனர் மொத்தம் 82 பதிவுகளை இதுவரை பதிவிட்டுள்ளார். 1,200க்கும் மேற்பட்டவர்களை பின்தொடரும் அவரை 6,800க்கும் மேற்பட்டவர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
மேலும் படிக்க | புல்லெட்டில் மணமக்களின் மாஸ் எண்ட்ரி: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோ
2 கோடிக்கும் மேலான பார்வையாளர்கள்
இந்நிலையில், கடந்த ஆக. 17ஆம் தேதி அன்று Kwality Walls ஐஸ்கிரீம் குறித்து வெளியிட்ட வீடியோவை தற்போது வரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 3 லட்சத்திற்கும் மேலானோர் லைக் போட்டுள்ளனர். அந்த வீடியோவின் பின்னணியில் பேசும் ஒருவர்,"ஒரு இரவு முழுவதும் இந்த வெண்ணிலா ஐஸ்கிரீமை திறக்காமல் வெளியில் வைத்திருந்தோம். காலையில் திறந்து பார்க்கும் போது அது உருகாமல் அப்படியே இருந்தது. அதனை கீழே ஊற்றிய போது அதிகமான பாம் ஆயில்தான் வெளியே வந்தது, சொல்ல வார்த்தையே இல்லை" என கூறுகிறார். இதனால்தான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தாக அவர் கூறுகிறார்.
வைரல் வீடியோ இதோ:
மேலும், சிறு வயதில் இருந்தே Kwality Walls ஐஸ்கிரீமை தான் விரும்பி சாப்பிடுவதாகவும் இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் Kwality Walls ஐஸ்கிரீமையும், அதன் தாய் நிறுவனமான Hindustan Unilever லிமிடெட் நிறுவனத்தையும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து, தங்களை தனிப்பட்ட முறையில் அணுகும்படி Kwality Walls தரப்பு கமெண்டில் பதிவிட்டிருந்தது.
இது ஐஸ்கிரீம் இல்லை...?
இந்த வீடியோ இணையத்தில் தற்போது தீயாய் பரவி வரும் நிலையில், அந்த பதிவின் கீழ் பலரும் அது ஐஸ்கிரீம் இல்லை என்றும் அது Frozen Desert எனவும் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர்,"Kwality Walls இதுவரை ஐஸ்கிரீம் விற்றதே இல்லை. இது பெரும்பாலும் எண்ணெயால் செய்யப்பட்ட Frozen Deserts என்பதையே விற்கிறது. அதன் முழு பேக்கேஜிங்கிலும் நீங்கள் ஐஸ்கிரீம் என்ற வார்த்தையை பார்க்கவே முடியாது" என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த வீடியோ குறித்து Kwality Walls இதுவரை பகீரங்கமாக அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கலப்பட ஐஸ்கிரீம் விஷம் போன்றது... கண்டறிய FSSAI பரிந்துரைக்கும் எளிய வழி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ