ஆண்களை காட்டிலும் பெண்கள் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பல தருணங்களில் நாம் உணர்ந்திருப்போம். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலரும் பலதுறைகளில் சாதித்து வருகின்றனர், இன்றைய காலத்து பெண்கள் விமானம் கூட ஓட்டத்தொடங்கி விட்டனர். நாளுக்கு நாள் பெண்கள் ஒவ்வொரு துறையிலும் சாதித்து பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். தற்போது வீர மங்கை ஒருவர் தமிழரின் பாரம்பரிய உடையான புடவையை அணிந்து தாமிரபரணி ஆற்றில் டைவ் அடிக்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க செய்துள்ளது. இதுவரையில் ஆண்கள் இதுபோன்று ஆற்றில் டைவ் அடிப்பதை கண்டுவந்த நமக்கு ஒரு பெண்மணி புடவையுடன் டைவ் அடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
வெறும் 20 நிமிடங்களே கொண்ட இந்த வீடியோ நெட்டிசன்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோவினை சுப்ரியா சஹு எனும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவாறு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் ஊதா நிற பட்டு புடவையணிந்த பெண் ஒருவர் தாமிரபரணி ஆற்றில் டைவ் அடித்து குதிக்கிறார். அந்த பெண்மணிக்கு எப்படியும் 40 வயதிற்கு மேல் இருப்பது போல தெரிகிறது, இந்த வயதிலும் அவர் இப்படி தைரியமாக ஆற்றில் டைவ் அடிப்பது இளம்பெண்களுக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அந்த ஐஏஎஸ் அதிகாரி வீடியோவுடன் சில வார்த்தைகளையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
Awestruck to watch these sari clad senior women effortlessly diving in river Tamirabarni at Kallidaikurichi in Tamil Nadu.I am told they are adept at it as it is a re\o- credits unknown, forwarded by a friend #women #MondayMotivation pic.twitter.com/QfAqEFUf1G
— Supriya Sahu IAS (@supriyasahuias) February 6, 2023
அதில், தமிழ்நாட்டின் கல்லிடைகுறிச்சியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் புடவையணிந்த வயது மூப்படைந்த பெண்மணி தைரியமாக சிரமமின்றி டைவிங் செய்வதை பார்த்து வியப்படைந்தேன். இது முற்றிலும் ஊக்கமளிக்கும் வீடியோவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இளம்பெண்களுக்கு ஊக்கமளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த வீடியோவை இதுவரை டிவிட்டரில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவை இணையாவசிகள் பலரும் லைக் செய்தும், பகிர்ந்தும், வீடியோவிற்கு சிறப்பான கமெண்டுகளை தெரிவித்தும் வருகின்றனர்.
மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ