உலகம் முழுவதும் அதிசயங்களால் நிரம்பியுள்ளது, இன்றைய சமூக ஊடக யுகத்தில், மிகவும் ஆச்சர்யமான விஷயங்களும், அதிசயங்களும் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் செய்தியில், அஜர்பைஜான் குறித்த மர்மத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். அஜர்பைஜானின் மலையிலிருந்து எழும் நெருப்பு 'யாணர் டாக்' (Yanar Dagh) என்று அழைக்கப்படுகிறது. இந்த தீ இந்த நாட்களில் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அங்குள்ள ஒரு மலையின் கீழ் பகுதியில் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருப்பது காணொளியில் காணலாம். இந்த தீ பல ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வரும் நிலையில், அதனை அணைக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
அஜர்பைஜான் நெருப்பு மலைகள்
அஜர்பைஜான் நெருப்பு மலையின் வீடியோவை சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவர் பகிர்ந்துள்ளார், இதைப் பார்த்து இணைய பயனர்கள் திகைத்துப் போனார்கள். இந்த காணொளியில் நெருப்பு எரிவதைக் காணலாம். இந்த நெருப்பின் மர்மம் பற்றி அறிய விரும்புகிறார்கள். அஜர்பைஜான் மலைகளில் ஏற்பட்ட தீ தான் அந்த மர்மமான விஷயம். இது 'நெருப்பு நிலம்' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் காணொளியில் சிறிய மலைத் தீ ஒன்று தெரியும்.
மேலும் படிக்க | WOW Video: தலைகீழாய் நின்று அம்பு விட்டு சாகசம் செய்யும் அழகி வீடியோ வைரல்
வைராலாகும் காணொளியை கீழே காணலாம்:
தீ எபிடித்தது எப்போது
பல இடங்களில் தீ தானாகவே பிடிக்கிறது என கூறப்படுகிறது. இவற்றில் மிகவும் ஆபத்தானது பாகு அருகே அப்ஷெரோன் தீபகற்பத்தில் அமைந்துள்ள யனார் டாக் ஆகும். உள்ளூர் மொழியில் எரியும் மலை என்று பொருள். இந்த தீ 4000 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது என்று எலிவா ரஹிலா என்ற சுற்றுலா வழிகாட்டியின் அறிக்கையை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் இது இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
நெருப்பு நாடு என்ற பட்டம்
அஜர்பைஜானில் பல இடங்களில் இதுபோன்ற தீ விபத்துகள் காணப்படுகின்றன. இதற்கு பல அறிவியல் காரணங்களும் கூறப்படுகின்றன. இந்த மர்மமான தீ பற்றும் சமப்வங்கள் காரணமாக இந்த நாட்டிற்கு நெருப்பு நிலம் என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பனியோ அல்லது கனமழையோ அணைக்க முடியாது. பலத்த காற்று வீசினாலும் இந்த தீயில் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்துகளுக்கு இயற்கை எரிவாயு தான் காரணம் என கூறப்படுகிறது. தற்போது வீடியோ வைரலான நிலையில், இது எப்படி சாத்தியம் என்று மக்கள் மீண்டும் விவாதத்தில் ஈடுபட்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ