சனி வக்ர பெயர்ச்சி 2022: ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு கிரகம் அதன் தற்போதைய ராசியை விட்டு வேறு ராசிக்குள் நுழைகிறது. சில கிரகங்கள் பிற்போக்கு நகர்விலும் செல்கின்றன. கிரகங்கள் தங்கள் இடத்தில் இருந்து மாறுவது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. இம்முறை ஜூலை மாதத்தில் 5 பெரிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. மிக மெதுவாக நகரும் சனி கிரகமும் இதில் அடங்கும்.
ஜூலை 12 ஆம் தேதி பிற்போக்கு நிலையில் மகர ராசியில் நுழையும் சனி 2023 ஜனவரி 17 ஆம் தேதி வரை இந்த நிலையில் இருப்பார். சனி நீதியின் கடவுள் மற்றும் கர்மாவுக்கு ஏற்றவாறு பலன்களை அளிப்பவர். சனியின் கடுமையான தண்டனைகள் மற்றும் மோசமான விளைவுகளைக் கண்டு அனைவரும் அஞ்சுவதுண்டு. சனியின் சஞ்சாரம் காரணமாக சில ராசிக்காரர்கள் 6 மாதங்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள்.
இந்த ராசிக்காரர்கள் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள்
சனி மகர ராசியில் நுழைந்தவுடன் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் சனி தசையிலிருந்து விடுபடுவார்கள். ஜோதிட சாஸ்திரப்படி மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். இந்த மூன்று ராசிக்காரர்களும் 6 மாதங்களுக்கு சனியின் கோபத்தில் இருந்து விடுபடுவார்கள். ஜனவரி 17, 2023 முதல், இந்த ராசிக்காரர்கள் மீண்டும் சனியின் கோபத்தை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க | ஜூலை மாதம் எப்படி இருக்கும்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்
இந்த ராசிகளில் சனி தசை தொடங்கும்
சனி மகர ராசியில் நுழைந்தவுடன் மிதுனம் மற்றும் துலாம் ராசிக்கு சனி தசை ஆரம்பிக்கும். அதே சமயம் தனுசு ராசிக்காரர்கள் ஏழரை நாட்டு சனியால் பாதிக்கப்படுவார்கள். இந்த மூன்று ராசிக்காரர்களும் சனியின் பிடியில் 6 மாதங்கள் மட்டுமே இருப்பார்கள். ஏனென்றால் ஜனவரி 17, 2023 அன்று சனி மீண்டும் தன் இடத்திற்குத் திரும்பும். அப்போது சனியின் தசையிலிருந்து விடுபட்ட ராசிக்காரர்கள் மீண்டும் சனியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
- சனியின் கோபத்திற்கு ஆளானவர்கள் மற்றும் சனியின் கோபத்தில் இருந்து விடுபடுபவர்கள் அனைவரும் சனிக்கு இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும்.
- இந்த நேரத்தில் சனியின் மந்திரங்களை உச்சரிக்கவும்.
- சனிக்கிழமைகளில் சனி சாலிசா மற்றும் ஹனுமான் சாலிசாவை கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டும்.
- சனிபகவானின் தோஷம் குறைய ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யுங்கள்.
- கருப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம்.
- சனி தொடர்பான விஷயங்களை தானம் செய்வதும் நன்மை தரும்.
- சனிக்கிழமை மாலை அரச மரத்தின் முன் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR