ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய்

Sevvai Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2024, 01:52 PM IST
  • துலா ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும்.
  • அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
  • இழந்த பணத்தை மீட்டுவதற்கான பல வாய்ப்புகளை பெறுவீர்கள்.
ஜூலை மாத செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்: செழிக்க வைப்பார் செவ்வாய் title=

Sevvai Peyarchi Palangal: அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரகங்கள் அனைத்துக்கும் தனித்துவமான முக்கியத்துவம் இருக்கின்றது. கிரகங்களில் மாற்றங்கள் ஏற்படும் போது மனித வாழ்க்கையில் கிரகங்களின் அம்சங்களில் மாற்றும் ஏற்படும்.

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு, மனை, நிலம், சொத்துகள், தைரியம், உறுதி, சகோதரர்கள், காவல்துறை, தலைமைத்துவம், குரோதம் ஆகியவற்றின் காரணி கிரகமாக செவ்வாய் கருதப்படுகிறார். செவ்வாய் கிரகத்தில் மாற்றம் ஏற்படும்போதெல்லாம் மனித வாழ்க்கையில் இந்த அம்சங்களிலும் மாற்றம் ஏற்படும்.

செவ்வாய் தற்போது தனது சொந்த ராசியான மேஷத்தில் இருக்கிறார். ஜூலை 12 2024 -இல் அவர் ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் நாடு, உலகம் மற்றும் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் விசேஷ நன்மைகள் ஏற்படும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இங்கே காணலாம்.

மேஷம் (Aries)

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி ஆக்கப்பூர்வமான நன்மைகளை அளிக்கும். நிலம் மற்றும் வீடுடன் தொடர்புடைய பிரச்சனைகள் தீரும். பண வரவு அதிகமாவதால் நிதி நிலைமை நன்றாக இருக்கும். பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீட்டுகளுக்கும் இது ஏற்று நேரமாக இருக்கும். வணிகத்தை விரிவாக்க வாய்ப்பு அமையும்.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி வாழ்க்கையில் தன்னம்பிக்கையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்தும். பணவரவு அதிகமாகும். இதனால் பொருளாதார நிலையும் மேம்படும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும்.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு அட்டகாசமானன நேரம்.... அனைத்திலும் வெற்றி

துலாம் (Libra)

துலா ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இழந்த பணத்தை மீட்டுவதற்கான பல வாய்ப்புகளை பெறுவீர்கள். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகமாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

விருச்சிகம் (Scorpio)

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். லாபம் அதிகரிக்கும். இந்த காலத்தில் பண வரவு அதிகமாகும். இந்த காலத்தில் பணத்தை நன்றாக சேமிக்க முடியும். மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல முடிவுகள் வந்து நல்ல இடத்தில் வேலையில் அமர்வார்கள். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்

மீனம் (Pisces)

மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரத்தை துவக்க இது ஏற்ற நேரமாக இருக்கும். ஒப்பந்தங்கள் விரைவாக கையெழுத்தாகும். வீடு, நிலம் வாங்க யோசித்துக் கொண்டிருந்தால் அதை இப்பொழுது செய்யலாம். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் உறவு மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: நாளை முதல் 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம்... முழு ராசிபலன் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News