Guru Udhayam Peyarchi Palangal 2024: இந்திய ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு ஒருமுறை தங்கள் ராசியில் இருந்து இடம் மாறுகின்றன. கிரகங்களின் ராசிகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் கிரகங்கள் நேர் சுற்றில் இயங்கினால், சில சமயங்களில் எதிர்திசையிலும் இயங்கும். அதேபோல, சில நேரங்களில் கிரகங்கள் உதயம் ஆகும் என்றால் பல சமயங்களில் அஸ்தமனமாகும்.
கிரகங்களின் உதயமும் அஸ்தமனமும் கிரக சஞ்சாரத்தைப் போன்றே அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தேவர்களின் குருவான குரு பகவான் ஜூன் 3ம் தேதி மதியம் 03.21 மணிக்கு ரிஷப ராசியில் உதயமாகிறார். ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாவதால் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்
கடகம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ரிஷபம் ராசியில் குரு உதயமாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு மோசமான காலமாகும். மிந்துன ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் இறக்கம் ஏற்படலாம். வேலையில் பொறுப்பு அதிகரிக்கும், ஆனால் பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.கூட்டுத் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
கன்னி
குருவின் உதயம் குருவின் உதயம் (Guru Udhayam 2024) கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சோதனையான காலகட்டத்தைக் கொடுக்கும். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினரின் மனத்தாங்கலை சந்திக்க நேரிடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது. வெளிநாட்டு பயணங்களில் கவனம் அவசியம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் மனதிடத்தை சோதித்து பார்க்கும் நேரமாகைது இருக்கலாம். தொட்ட வேலைகள் சரியாக முடியவில்லை என்ற கவலை ஒருபுறம் என்றால், பணப்பிரச்சனைகளையும் குரு உதயம் கொடுக்கும். இருந்தாலும், குலதெய்வ வழிபாடு குரு உதயத்தின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றும்.
துலாம்
வியாபாரிகளுக்கு குரு உதயம் பாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் சில சிரமங்களை சந்திப்பார்கள். சம்பள உயர்வு எதிர்பார்த்த அளவில் கிடைக்காது. வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இது சரியான காலம் அல்ல. குரு உதயத்தின் தாக்கத்தால் தொழில் மற்றும் வியாபாரத்தில் பணம் முடங்கும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | சாகாவரம் பெற்றாலும் அகங்காரமே எமனாகும்! விஷ்ணுவின் நரசிம்மர் ஜெயந்தி தினம் மே 21!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ